அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் – விடுதலைப் புலிகள் நேரடி மோதல்

அம்பாறை மாவட்டம் லகுகலை பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற நேரடி மோதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

லகுகலை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7:10 நிமிடமளவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேரடி மோதல் நடைபெற்றது.

இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.