யுஎஸ்-வீட்டில் விழுந்து நொறுங்கிய விமானம்: 49 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அருகில் உள்ள பஃபலோ நகரில் வீட்டின் மீது பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 49 பேர் பலியாயினர்.


விபத்தில் சிக்கிய விமானம் 60 பயணிகளுடன் நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரிலிருந்து பஃபலோவுக்கு சென்று கொண்டிருந்தது.

விமான நிலையத்தை நெருங்கிய நிலையில் புறநகரில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.

விழுந்த வேகத்தில் விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதில் இதுவரை 49 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 60 பேருமே பலியாயிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.