புலம்பெயர் மக்களால் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி மரணம்

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி மரணமடைந்துள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி ஆவார்.

வன்னியில் உள்ள ஊடக இல்லத்தில் இருந்து ஊடகப் பணியை இவர் ஆற்றி வந்த இவர், யாழ். மண்டைதீவை தாய் மண்ணாகக் கொண்டவர்.

மட்டக்களப்பு பொலன்னறுவ மன்னம்பிட்டியில் நீண்டகாலம் வாழ்விடமாகக் கொண்ட இவர், ஒரு பிள்ளையின் தந்தையும் ஆவார்.

Source & Thanks : puthinam .com

Leave a Reply

Your email address will not be published.