அம்பாறையில் விடுதலைப் புலிகள் தாக்குதல்: சிறிலங்கா காவல்துறையை சேர்ந்த ஒருவரும் 3 இராணுவத்தினரும் பலி

அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் இராணுவத்தினர் மூவருமாக நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

சம்மாந்துறை பகுதியில் உள்ள வீரமுனையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:45 நிமிடமளவில் காவல்துறையின் காவலரண் ஒன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

பன்னலகமவுக்கும் கோயில்கந்தை படை முகாமுக்கும் இடையில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினர் மீது இன்று பிற்பகல் 1:45 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் 3 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.