பிரபாகரன் கொல்லப்படும் தினமே நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த நாளாக கருதப்பட வேண்டும்: மேர்வின் சில்வா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்படும் தினமே நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த தினமாக கருதப்பட வேண்டும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து பயங்கரவாதம் முற்றாக இல்லாதொழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிபத்கொட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்டெடுத்த சகல பெருமையும் ஜனாதிபதி மற்றும் பாJகாப்புச் செயலாளரைச் சென்றடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.