குழந்தைகளை கொடுமைப்படுத்தவது வெட்கப்படக்கூடிய செயல் : சோனியா

புதுடில்லி : குழந்தைகளை கொடுமைப்படுத்துவது வெட்கப்படக்கூடிய செயல், இவ்வாறு சோனியா தெரிவித்துள்ளார். டில்லியில் குழந்தைகைளுக்கு தேசிய விருது வழங்கும் விழாவில் சோனியா இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மையில், உ.பி.,யில் சிறுமி ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்பட்டாள். இது வெட்கப்படக்கூடிய செயல் என்றும் நமது நாட்டில், குழந்தைகளை பாதுகாப்பதற்காக சட்டதிட்டங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் சோனியா தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.