அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாத அரச சார்பற்ற நிறுவனங்கள் வவுனியாவில் இருக்க வேண்டிய அவசியமில்லை: ரிசாட் பதியுதீன்

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாத அரச சார்பற்ற நிறுவனங்கள் வவுனியாவில் இருக்க வேண்டிய அவசியமில்லை என மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அறிக்கை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உரிய அறிக்கை சமர்ப்பிக்காத அரச சார்பற்ற நிறுவனங்களை வவுனியாவிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல அரச சார்பற்ற நிறுவனங்கள் அகதி முகாம்களுக்கு செல்ல அனுமதி கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.