தமிழ்நாட்டில் மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல்

தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் சார்பாக ”தமிழீழ மாணவர்கள் போராட்டக் குழு” என்ற ஒரு அமைப்பை மாணவர்கள் தொடங்கியுள்ளனர்.

பல கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் இவ்வமைப்பில் இணைந்துள்ளனர். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்த போராட்டக் குழு தொடங்கப்பட்டுள்ளது.

அவர்கள் கீழ்க் கண்ட கோரிக்கையை வலியுறித்தி சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் செய்யும்பொழுது அவர்களை காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

அவர்களின் கோரிக்கைகள்:

1. இந்திய அரசே போரை நிறுத்து! ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்று!

2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!

3. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!

காவல் துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பிறகு அந்த மாணவர்கள் சாகும் வரை உண்ணா நிலையை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.

Source & Thanks tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.