கரும்புலிகளின் முகாமை கண்டுபிடித்துள்ளோம் – இலங்கை இராணுவத்தினர்

இலங்கை ராணுவத்தினர், தாங்கள் விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படையான கரும்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட முகாமொன்றைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கூடவே பல விடுதலைப் புலிப் போராளிகளைக் கொன்றுள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.

இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் அரசுக்கு ஆதரவான தமிழ் அமைப்பு ஒன்றினால் நடத்தப்பட்ட பேரணியொன்று முல்லைத்தீவுப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள சிறு பகுதியில் அகப்பட்டுள்ள போராளிகள் அல்லாதவர்களை வெளியே வர விடுமாறு புலிகளை வலியுறுத்தியுள்ளது.

ஆனால் புலிகள் அந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்துள்ளனர். பொதுமக்கள் எவரையும் அவர்களின் விருப்பத்துக்கு எதிராகத் தாங்கள் தடுத்து அப்பகுதியில் வைத்திருக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Source & Thanks : www.bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.