புதுக்குடியிருப்பை வல்வளைப்பு செய்ய தயாராக இருந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் ஊடறுத்து தாக்குதல் – 150 படையினர் பலி – 3 டாங்கிகள் அழிப்பு

புதுக்குடியிருப்பு நகரை வல்வளைப்புச் செய்வதற்கு தயாராக இருந்த படையினர் மீது இன்று காலை முதல் விடுதலைப் புலிகள் மேற்கொண்டுவரும் ஊடறுப்புத் தாக்குதலில் சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

150ற்கும் அதிகமான படையினர் இதுவரை கொல்லப்பட்டுள்ளதுடன் 350பேர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் மூன்று முதன்மைப் போர் டாங்கிள் மற்றும் துருப்புக்காவி உட்பட பெருளவு படையினரின் ஊர்திகள் விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.

இந்த ஊடறுப்புத் தாக்குதல் தொடர்பாக விடுதலைப்புலிகளால் ஊடகங்களிற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்காவின் 59 ஆவது டிவிசன் படையினர் பாரிய ஆயத்தங்களுடன் தயாரான சூழ்நிலையில் இருந்தனர். இவர்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர்.

இதில் 150-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகளால்

டாங்கிகள் – 02

துருப்புக்காவி – 01

இராணுவ ஊர்திகள் (ட்றக்) – 02

இராணுவ பேருந்து – 01

இராணுவ உழுபொறிகள் – 02  ஆகியன இதுவரை விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

வாகனங்களுக்குள் படையினர் இருந்த போதே விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இருந்த பெருமளவிலான படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் இந்த தொடர் தாக்குதலில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வீராவேசமான தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொண்ட வண்ணம் விடுதலைப் புலிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published.