டாடா மோட்டார்ஸ் அடைந்த நஷ்டம் ரூ.263 கோடி

மும்பை : 2008 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த மூன்றாவது காலாண்டில், இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் ரூ.263.26 கோடி நஷ்டமடைந்திருக்கிறது.

இதற்கு முந்தைய வருடம் இதே காலாண்டில் அது ரூ.499 கோடி லாபம் சம்பாதித்திருந்தது. இப்போது ஏற்பட்டிருக்கும் ரூ.263 கோடி நஷ்டத்தில், நேஷனல் எக்சேஞ்ச் லாஸ் ( என்.இ.டி.) ரூ.226.52 கோடியும் அடங்கும். அந்த கம்பெனியின் மொத்த வருவாயும் ரூ.7,251.83 கோடியில் இருந்து 34 சதவீதம் குறைந்து ரூ.4,758.62 கோடியாகி இருக்கிறது. வாகனங்களுக்கான உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதாலும், சர்வதேச அளவில் நிலவி வரும் நிதி நெருக்கடியால் வாகனங்களுக்கான டிமாண்ட் குறைந்து போனதாலும் விற்பனை குறைந்து, அதன் காரணமாக நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். உலக அளவில் பஸ் லாரி சந்தையில் 60 சதவீத மார்க்கெட் ஷேரை வைத்திருக்கும் டாடா மோட்டார்ஸ், கடந்த வருடந்தான் இங்கிலாந்தின் பிரபல கார் நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரை 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியிருந்தது. டாடா மோட்டார்ஸில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அடுத்து, அதன் பங்கு மதிப்பும் மூன்றாவது காலாண்டில் 54 சதவீதம் குறைந்திருக்கிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.