காஷ்மீரில் அபு ஹமாஸ் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:காஷ்மீரில் மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களில், பாதுகாப்புப் படை ஜவான் இருவர் பலியாயினர்


.காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம், அமர்கார் கிராமத்தில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின் போது, அங்குள்ள வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையில், அல்-பதார் பயங்கரவாத அமைப்பின் முக்கிய கமாண்டர் அபு ஹமாஸ் கொல்லப்பட்டான்.

நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை நீண்ட இந்த சண்டையில், ராஷ்டிரிய ரைபிள் படைப் பிரிவைச் சேர்ந்த சோகன் சிங் என்னும் வீரர் கொல்லப்பட்டார்.வடக்கு காஷ்மீர், பாண்டிபோரா மாவட் டத்தில் உள்ள அயத் முல்லா என்னுமிடத்தில், நேற்று காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது. இங்குள்ள அப்துல் அஜிஸ் லோன் என்பவர் வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர்.

இதையடுத்து, இந்தப் பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்றனர். இங்கு நடந்த சண்டையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இறந்துள்ளார். குப்வாரா மாவட்டம், ஹன்டிராவா பகுதியில் உள்ள பகிகரா கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதி ஒருவன் கொல்லப் பட்டான்; இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்.

Source & Thanks ; dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.