சிறையில் இருக்கும் ஆடிட்டர்களை பார்ட்னர்ஷிப்பில் இருந்து நீக்கியது பிரைஸ்வாட்டர்

ஐதராபாத் : சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ராமலிங்க ராஜூ, வட்லமணி ஹநிவாஸ் ஆகியோருக்கு, மோசடியில் <உதவியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடிட்டர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநிவாஸ் துல்லாரி ஆகியோரை பார்ட்னர்ஷிப்பில் இருந்து விலக்கி விட்டதாக ஆடிட் நிறுவனமான பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் தெரிவித்திருக்கிறது.


பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் பார்ட்னர்களாக இனிமேல் அவர்கள் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சத்யம் நிறுவன மோசடி விசயத்தில் அதன் ஆடிட் நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் மீது சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. அதன் ஆடிட்டர்களான கோபாலகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீநிவாஸ் துல்லாரி ஆகியோர், கடந்த பல வருடங்களாகவே, பிரைஸ்வாட்டர் சார்பாக சத்யத்தின் நிதி அறிக்கையை தனியாக தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் பார்ட்னர்ஷிப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இனிமேல் அவர்கள் பிரைஸ்வாட்டர் சார்பாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.