பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்படலாம் ?

புதுடில்லி : பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.4 ம், டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.ஒன்றும் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதை அடுத்து, பொருளாதார விவகாரத்திற்கான கேபினட் கமிட்டி இன்று மாலை கூடி, பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். கடந்த டிசம்பர் 5 ம் தேதிதான் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.5 ம், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.2 ம் குறைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதத்தில் பேரல் ஒன்றுக்கு 147 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, இப்போது 40 டாலருக்கும் குறைவான விலையில்தான் இருக்கிறது.

Source & Thanks ; dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.