பிரபாகரன் தப்பிச் செல்லவில்லை : புலிகள்

போர் முனையிலிருந்து பிரபாகரன் தப்பிச் செல்லவில்லை என்றும், அப்பாவித் தமிழ் மக்களை கேடயமாகப் பயன்படுத்தவில்லை என்று விடுதலை புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழர்களுக்காகவே தாங்கள் போராடுவதாகவும், அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் கூறுவது பொய்ப் பிரச்சாரம் என்றும் குறிப்பிட்டார்.

தங்கள் மீது இலங்கை அரசு அபாண்டமாகக் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருப்பதாகக் கூறிய நடேசன், தங்களது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே 2 வருடங்களாக இடம் பெயர்ந்து மக்கள் தங்களுடன் வருவதாகக் கூறினார்.

தங்கள் மீது குற்றம்சாட்டும் சர்வதேச அமைப்புகள் வன்னிப் பகுதிக்கு நேரில் வந்து நிலைமையை கண்டறியும்படி பகிரங்கமாகத் தான் அழைப்பு விடுப்பதாகவும், பிரபாகரன் வெளிநாடு எங்கும் செல்லவில்லை, மக்களுடன் இருந்து போராடி வருவதாக நடேசன் மேலும் தெரிவித்தார்.

Source & Thanks : //in.tamil.yahoo.com

Leave a Reply

Your email address will not be published.