அமெரிக்கப் படைகள் சிவிலியன்களை கொன்றுள்ளதாக ஆப்கான் அதிபர் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான படைகள் சிவிலியன்களை கொன்றுள்ளதாக கூறியுள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் இச்சம்பவத்தை கண்டித்துள்ளார்.

காபூலின் வடகிழக்கில் உள்ள லக்மான் பிராந்தியத்தில் தலிபான்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் பதினைந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சனிக்கிழமையன்று அமெரிக்க இராணுவம் கூறியது.

ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பதினாறு சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் அரசாங்கத்தை பலவீனமாக்கி, தீவிரவாதிகளை பலமாக்கிவிடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஆப்கான் – அமெரிக்க கூட்டு விசாரணை நடைபெறவுள்ளது.

Source & Thanks : /www.bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.