இராணுவத்தினருக்கு முழு ஆதரவு – இஸ்ரேல் அரசாங்கம்

காசா நடவடிக்கை தொடர்பில் இஸ்ரேலிய இராணுவத்தை சேர்ந்த யார் மீது போர்குற்றங்கள் சுமத்தப்பட்டாலும், அன்னிய குற்ற நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க இஸ்ரேல் அரசாங்கம் முழு ஆதரவை கொடுக்கும் என இஸ்ரேலியப் பிரதமர் எகுத் ஒல்மர்ட் தெரிவித்துள்ளார்.

காசா நடவடிக்கை மூலம் இஸ்ரேலை எவ்வாறு இராணுவத்தினர் காப்பாற்றி வருகின்றனரோ அதே போல இஸ்ரேல் அரசாங்கம் தனது இராணுவத்தினரை காப்பாற்றும் என எகுத் ஒல்மர்ட் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தார்.

காசா நடவடிக்கையில் 1300 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது போர்க்குற்றங்கள் நடைபெற்றதா என்பது குறித்து சுயாதீன விசாரணைகள் நடைபெற வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் கோரியுள்ளனர்.

Source & Thanks : www.bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.