10 நிறுவனங்களின் பங்குகளால் ஒரே வாரத்தி்ல ரூ.44 ஆயிரம் கோடி நஷ்டம்!

மும்பை: இந்தியாவின் 10 முன்னணி நிறுவனங்கள் கடந்த ஒரே வாரத்தில் 44 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

இவற்றில் ரிலையன்சுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் மட்டுமே ரூ.10,200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் முழுவதுமே இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால் 6 பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் 4 முன்னணி தனியார் துறை நிறுவனப் பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

பொதுத்துறை நிறுவனங்களில் எம்எம்டிசி மட்டுமே அதிகபட்சமாக ரூ.10870 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் பங்குகளால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் ரூ.7,857 கோடி. என்டிபிசி, ஓஎன்ஜிசி, பார்தி ஏர்டெல், எம்எம்டிசி, இன்போஸிஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐடிசி, பிஎச்இஎல், மற்றும் என்எம்டிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் கடும் சரிவைச் சந்தித்து நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.