`ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (26.01.09) செய்திகள்

பாதுகாப்பு வலயம் என தானே அறிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதிக்குள் வன்னி மக்களை திரளச் செய்த சிறிலங்கா அப்பகுதியின் மீது தொடர்ச்சியான பீரங்கி தாக்குதலை நடத்தி பெரும் இனப் படுகொலையை மெதுவாக நிகழ்த்தி வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தமக்கள் பாதுகாப்பு வலயத்தில்ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களைப் பெறுவதற்காகக் காத்திருந்த பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கி தாக்குதலில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உடையார்கட்டு மற்றும் தேராவில் பகுதிகளில்ஏற்கெனவே இடம்பெயர்ந்து வீதியோரங்களில் தங்கியிருந்த பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு சம்பவங்களிலுமாக 60-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

!!!!!!!!!!!!!!!

வன்னியில் நிகழும் அகோர ஷெல் தாக்குதலில் தினமும் அப்பாவிப் பொது மக்கள் பலியாகி வரும் நிலையில் இன்று திங்கட்கிழமை நடைபெற உள்ள மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட் டத்தை வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கள் ஐவரும் கூட்டாக பகிஷ்கரிக்கத் தீர்மானித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக செல்வம் அடைக்கல நாதன், . கனகரட்ணம், . சிவசக்தி ஆனந்தன், . வினோதரலிங்கம், சிவநாதன் கிசோர் ஆகிய வன்னிமாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அறிக்கை ஒன்றைவிடுத்துள்ளார். அவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பவை வருமாறு:
வன்னியில் அரச படையினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை காரணமாக என்றுமே இல்லாத மனிதப்பேரவலம் ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் பொது மக்களின் வாழ்விடங்கள், அவர்களின் தற்காலிக இருப்பிடங்கள் மீது கண் மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தினமும் அப்பிரதேசம் முழுவதும் மரண ஓலம் கேட்டவண்ணம் உள்ளது.அங்கு பொதுமக்கள் இராணுவத்தின் வான் தாக்குதலில் கொல்லப்படாத நாள்களே இல்லை. இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் பலியானவரின் இறுதி கிரியைகள் கூட நடக்க முடியாத அவல நிலையை பொது மக்கள் அங்கு எதிர்நோக்கிளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் போராட்டத்துடன் எவ்விதத்திலும் தொடர்ப்பு அற்ற 4 லட்சத்து 75 ஆயிரம் பொது மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கி யுள்ளனர். இராணுவத்தினரின் கடுமையான ஷெல்தாக்குதலில் சிக்கி கடந்த ஒன்பது நாட்களில் நூற்றுக்கும் அதிக மான பொது மக்கள் உயிர் இழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலர் நிரந்தரமாக தமது அங்க அவயவங்களை இழந்து உள்ளனர்.
தொடர்ச்சியான இடம்பெயர்வு, அகோர ஷெல் வீச்” காரணமாக மிகவும் கலவ ரமான குழப்பம் நிறைந்த மரண அச்சம் நிறைந்த அந்நிலையில் காயம் அடைந் தவர்களை சிகிச்சைக்கு அனுப்பும் போது தேசிய அடையாள அட்டை கேட்கப்படுகின்றது. தேசிய அடையாள அட்டை கொண்டு வராத காரணத்தால் மேலதிக சிகிச்சைக் காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்படாமல் ஏராளமான காயக் காரர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டி ருக்கின்றனர்.

இதனைக் கருணை உள்ளம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ள மாட் டார்கள். இது ஜீவ காருண்யம் அற்றகொடுஞ்செயலாகும் என்று தெரிவித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண யுத்தம் மாத்திரம் போதாது. பொருத்தமான அரசியல் தீர்வின் ஊடாகவே இப்பிரச்சினையை முற்றாகத் தீர்க்கமுடியும். ஆகவே, அரசியல் தீர்வைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கவேண்டும். இவ்வாறு இலங்கை வந்திருக்கும் ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!

காஸா வன்முறைகள் மீது தனது முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ள உலகம் இலங்கையையும் மறந்து விடக் கூடாதென ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான விவகாரங்களுக்கான முன்னாள் செயலாளர் நாயகம் ஜன் எகெலென்ட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
காஸாவிலும், இலங்கையிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுகள் மக்கள் ஆதரவு உள்ள பயங்கரவாத வழிமுறைகளைப் பின்பற்றும் அமைப்புக்களை அழிக்க முயல்கின்றன. இரு நாடுகளிலும் அரச படைகள் மக்கள் உரிமைகளை பரந்துபட்ட அளவில் மீறியுள்ளன. இரு பகுதிகளிலும் சர்வதேச ஊடகங்களையும் சாட்சியங்களையும் தவிர்ப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுகின்றன.
காஸா கட்டடமொன்றின் மீது வீழ்ந்து வெடிக்கும் ஷெல் உடனடியாக கவனத்தை ஈர்க்கிறது; சர்வதேச செய்தியாகின்றது. எனினும் இலங்கையில் கடுமையாக மோதலிற்கு பின்னர் முழுமையாக நகரமொன்று கைப்பற்றப்படுவது உலகின் கவனத்தை ஈர்பதில்லை. என்று .நா.வின் முன்னாள் அதிகாரி எகலெண்ட் மேலும் கூறினார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் உடனடியாக இப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் வன்னியில் உள்ள 4 இலட்சத்து 70 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் எதுவித நிவாரண உதவிகளும் கிடைக்காமல் போவதற்கும், பொதுமக்களுக்கான பணிகள் அனைத்தையும் சிறீலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

வன்னியில் இடம்பெயர்ந்து மிக அவல வாழ்வை வாழ்ந்து வரும் மக்களையும் மேலும் நிர்கதியாக்கும் நடவடிக்கையாகவும் மக்களை வவுனியா நோக்கி இழுக்கும் முயற்சிகளை சிறீலங்கா அரசாங்கம் எடுத்து வருகின்றது. அந்தவகையில் தற்காலிகமாக புதுக்குடியிருப்பில் இருந்த இரு மாவட்ட அரசாங்க அதிபர்களையும் அவர்களின் அரச அலுவலகங்களையும் மூடிவிட்டு வவுனியாவுக்கு வருமாறு கடந்த சனிக்கிழமை இவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் ஆகிய இருவருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேநேரம் மக்களுக்கான பணிகளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து மேற்கொள்வோம் என அறிவித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் யுத்த சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களும் நிவாரண உதவிகளை வழங்கத் தயாராகி வருகின்றனர்.

இதன் பிரகாரம் இன்று காத்தான்குடியில் நிவாரண நிதியமொன்று ஆரம்பிக்கப்பட்டு குடும்பத்திற்கு ஆகக் குறைந்தது 100 ரூபா என நிதி திரட்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

பிரதேச பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜாமி அத்துல் உலமா சபை,நகர சபை, வர்த்தக சம்மேளனம், ரிசாலா எப்.எம். ஆகியன இணைந்து இதற்கான நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

சுமார் 500 பாடசாலை மாணவர்கள் பகுதி பகுதியாகப் பிரிந்து சென்று நிதி திரட்டும் பணிகளில் இன்று ஈடுபட்டதைக் காணக் கூடியதாக இருந்தது

இந்தப் பிரதேசத்தில் சுமார் 12 ஆயிரம் குடும்பங்கள் உள்ளதாகவும் மக்களிடமிருந்து கணமான உதவியும் ஒத்துழைப்பும் கிடைத்து வருவதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாள் வேலைத்திட்டமாகவே இந்நிதி திரட்டும் பணிகள் நடைபெறும் என்றும் அதன் பின்பு நிவாரணப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு மக்களுக்கு நேரடியாக அடுத்த சில தினங்களில் விநியோகிககப்படும் என்றும் ஏற்பட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர். இன்று காலை பள்ளிவாசல்கள் சம்மேளன அலுவலகத்தில் இது தொடர்பான வைபவம் நடைபெற்ற போது ரிசாலா எப்.எம். பணிப்பாளர் .எல்.எம்.பளீல், ஒரு தொகை நிதியை சம்மேளனத் தலைவர் எம்..சுபைரிடம் கையளித்து இதனை ஆரம்பித்து வைத்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!
ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாலைதீவு ஜனாதிபதி நஷீட்டின் அழைப்பையேற்று அங்கு சென்றுள்ளார்.

இன்று காலை அவர் அதிகாரப் பகிர்வு தொடர்பான விரிவுரை ஒன்றை மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நிகழ்த்தவுள்ளார். விரிவுரை நிகழ்வில் அமைச்சர்கள், மக்கள் மஜ்லிஸின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் கழகங்கள் அமைப்புக்களின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அரசியல்வாதிகள் உட்படப் பலர் கலந்து கொள்கின்றனர்
!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் நாளைய தினம் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து செய்தி ஊடகவியலாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

உயர் காவற்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஊடக நிறுவனங்களையும், ஊடகவியலாளர்களையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் காவற்துறையினரும், இராணுவத்தினரும் இந்த சந்திப்பின்போது செய்தி ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்க உள்ளனர்.
!!!!!!!!!!!!!!!
இலங்கையின் தேசியப் பிரச்சினையில் சர்வதேச சமூகம் தலையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, யசூசி அகாசியிடம் தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அகாசிக்கும், ஜே.வி.பி தலைவருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வினை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் இறைமையை பாதுகாப்பதே ஜனாதிபதியின் முக்கிய பொறுப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசாங்கம் தேவையற்ற வகையில் மூக்கை நுழைப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ள மக்கள் இராணுவமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள்போல் இருப்பதாக அவர்களது உறவினர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்த 2000ற்கும் மேற்பட்டோர் நெளுக்குளம் மற்றும் செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினம் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வித காரணம் கொண்டும் முகாம்களை விட்டு வெளியேறவோ அல்லது முகாம்களில் இருப்பவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அங்கு செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை.
தங்கள் உறவினர்களைப் பார்க்க முகாமுக்குச் சென்றபோது அனுமதி வழங்கப்படாததால் விசனமடைந்த மக்கள் இந்த நலன்புரி நிலையங்கள் இராணுவ முகாம்களைப் போலிருப்பதாகவும் அங்கிருப்போர் கைதிகளைப் போன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்களைச் சந்திக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியோர் தெரிவித்தனர்.
மக்களைச் சந்திக்க அனுமதி வழங்கப்படாமை குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது பாதுகாப்பு நடைமுறைகளே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நிலையங்களைச் சுற்றி முட்கம்பி வேலி போடப்பட்டு அங்கு தங்கியுள்ள மக்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு சமைத்த உணவுகள் வழங்கப்படுவதாக குறிப்பிடும் நிலைய பொறுப்பதிகாரிகள் மலசலகூடங்களை செஞ்சிலுவைச் சங்கம் அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனினும் நலன்புரி நிலையங்களுக்குள் வெளியார் யாரும் செல்ல முடியாத அளவிற்கு பாதுகாப்பு நடைமுறை அமுலாக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!
முல்லைத்தீவில் தருமபுரத்திற்கு கிழக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் படையினரின் முன்னரங்கக் காவல் நிலைகளை உடைத்து கொண்டு முன்னேற முயன்ற விடுதலைப் புலிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று படகுகள் அழிக்கப்பட்டும் இரு படகுகள் சேதமடைந்துமுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புத் தரப்பு மேலும் கூறுகையில்;
கல்மடுக்குளக்கட்டைத் தகர்த்த புலிகள் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த போது அதனூடாக ஐந்து படகுகளில் தாக்குதல் நடத்த வந்ததுடன், அதற்கு வசதியாகக் கடும் ஆட்லறி ஷெல் தாக்குதலையும் மோட்டார் குண்டுத் தாக்குதலையும் நடத்தினர்.
நான்கு அடி உயரத்திற்கு வெள்ளம் வடக்குப் பக்கமாகப் பாய்ந்த போது கால்நடைகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் யாவும் அடித்துச் செல்லப்பட்டன. புலிகளின் தொடர்ச்சியான கடும் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
எனினும், இதன் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை.
இதேநேரம், நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணிமுதல் தர்மபுரத்திற்கு தெற்கேயும் கல்மடுவுக்கு வடக்கேயும் 57 ஆவது மற்றும் 58 ஆவது படையணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சமர் நடைபெற்றுள்ளது.
அதிகாலை 1.45 மணியளவிலும் 3 மணியளவிலும் நடைபெற்ற மோதல்களில் புலிகள் பலத்த இழப்புகளைச் சந்தித்துள்ளனர்vd. படைத்தரப்பு தெரிவித்துள்ளது
இதேநேரம்
, விசுவமடுவுக்கு மேற்கேயிருந்து முன்னேறும் 57 ஆவது படையணியினர் சனிக்கிழமை புளியம்பொக்கனைப் பகுதியிலுள்ள புலிகளின் நிலைகள் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தனர்.
உடையார்கட்டுக்குளம், விசுவமடுக்குளம், புதுக்குடியிருப்பின் தென்பகுதியிலும் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த மோதல்களில் புலிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. .,it njhlh;ghf tp.Gypfs; jug;G nra;jpfs; ,Jtiu vJTk; ntspahftpy;iy.
!!!!!!!!!!!!!!
அரியாலை
, மாம்பழம்சந்தி, நாயன்மார்கட்டு மற்றும் ஆசீர்வாதப்பர் வீதி போன்றவற்றை உள்ளடக்கிய பகுதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
அதிகாலை முதல் நண்பகல் வரை மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையின் போது வீதியால் சென்ற வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குள்ளாக்கப்பட்டதோடு பொதுமக்களின் அடையாள அட்டைகளும் பரிசீலிக்கப்பட்டன.
இந்தப் பகுதிகளை உள்ளடக்கிய வீடுகளிலும் படையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் போது வீடுகளில் இருந்தோர் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உடுவில ஈஞ்சடி வைரவர் ஆலயத்தை உள்ளடக்கிய பகுதியிலும் நேற்று படையினரால் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
!!!!!!!!!!!!
வன்னி இராணுவ நடவடிக்கையில் இதுவரை படையினரால் மீட்கப்பட்ட நிலப் பிரதேசங்களை மீள விடுதலைப்புலிகள் கைப்பற்ற ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லையென உறுதியாகத் தெரிவித்திருக்கும் இராணுவத்தின் 58 ஆவது படையணிக் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சவீந்திர சில்வா, விடுதலைப்புலிகளிடம் தளபதிகளும் போதியளவு ஆயுத பலமும் இருந்தாலுமே களத்தில் போராட போதுமானளவு போராளிகள் இல்லையென்றும் சுட்டிக் காட்டினார்
!!!!!!!!!!!!!!!!
india
நாட்டின் 60வது குடியரசு தினம் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் தேசிய கொடியை ஏற்றினார். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமர்ஜவான் ஜோதிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் .கே.அந்தோணி அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் கஜகஸ்தான் அதிபர் நூர் சுல்தான் ஆகியோரை, பாதுகாப்பு அமைச்சர் வரவேற்றார். பின்னர், குடியரசுத்தலைவர் தேசிய கொடியை ஏற்றினார். பல்வேறு மாநில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றன. இந்திய விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து சுமார் 20 ஆயிரம் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங், இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், முதல்முறையாக குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு முதுகுப் புறத்தில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக, அதிக வலி ஏற்பட்டதால், மருத்துவர்கள் குறைந்தது ஒரு வார காலத்திற்காவது ஓய்வெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதின் பேரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

முதலமைச்சர் வெளியூர் பயணங்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்த்து, சில நாட்கள் ஓய்வெடுப்பது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் அது வரை ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் அந்த நிகழ்ச்சிகளுக்கான திகதிகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா, இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.கவர்னர் பர்னாலா தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். வீர தீர செயல்களுக்குக்கான பதக்கங்களை முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.

பின்னர் காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் தேசியக் கொடியை கவர்னர் பர்னாலா ஏற்றி வைக்கிறார். முப்படை வீரர்கள், காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொள்கிறார். வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான தமிழக அரசின் அண்ணா பதக்கம், மத்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்கம், மதநல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் கோட்டை அமீர் விருது கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகிய விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடக்கிறது. இவற்றை கவர்னரும் முதல்வரும் பார்வையிடுகின்றனர். விழாவில் அமைச்சர்கள். அரசு உயரதிகாரிகள், நீதிபதிகள், எம்.பி. மற்றும் எம்.எல்..க்கள் பங்கேற்கின்றனர்.

விழா நடக்கும் இடத்தில் கலை நிகழ்ச்சி மற்றும் அணிவகுப்புகளை பொதுமக்கள் பார்த்து மகிழ வசதியாக சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள. நிகழ்ச்சிகள் குறித்த நேரடி வர்ணனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன
!!!!!!!!!!!!!
தமிழர்களை அழிக்க சிங்கள அரசாங்கம் நடத்தும் இனப் படுகொலையை இந்திய அரசாங்கம் தான் தேவையான அனைத்தையும் வழங்கி இயக்கி வருகின்றது. இந்திய மத்திய அரசாங்கம்தற்போது இறுதி கட்டமாகதமிழினத்தை வேரறுப்பதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் திட்டத்தை அரங்கேற்றுகின்றது என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ சீற்றம் வெளியிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வைகோ அளித்த பேட்டியின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஈழத் தமிழர்களை அழிக்கும் சிங்கள அரசாங்கம் நடத்தும் இனப் படுகொலைக்கு இந்திய அரசாங்கம் ஆயுத பயிற்சி மற்றும் நிதி உதவி உட்பட தேவையானவற்றை வழங்கி இயக்கி வருகின்றது.
மத்திய அரசாங்கம் தற்போது இறுதி கட்டமாக தமிழினத்தை வேரறுக்க, விடுதலைப் புலிகளை அழித்து திட்டத்தை அரங்கேற்ற முனைந்து உள்ளது.
விடுதலைப் புலிகளை போரில் வெல்ல யாராலும் முடியாது. மேலும் மேலும் வெல்வார்கள். 50 ஆண்டுகளாக போராடி வரும் தமிழர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்.
தமிழினத்தை அழித்து, ஈழப் பகுதியிலேயே பிரபாகரனை பிணமாக்க அல்லது கைது செய்ய திட்டமிட்ட சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சவுக்கு விடுதலைப் புலிகள் சரியான மரண அடி கொடுத்து வருகின்றனர்.
சிங்கள இராணுவத்திடம் இழந்த யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகள் மீண்டும் விரைவில் மீட்பார்கள்.
முதலமைச்சர் கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகுவோம் என்று கூறினார், பின்னர் பதவியை துறக்க தயார் என்று கூறினார், இப்போது ஆட்சியை இழக்க தயார் என்று நாடகம் நடத்தி வருகின்றார்.
தமிழர்களுக்கு எதிராக செயற்படும் மத்திய அரசாங்கத்துக்கு கருணாநிதி துணை நிற்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.
ஈழப் போரில் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள். ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்தி இருப்பது இருட்டில் வெளிச்சமாக உள்ளது.
எந்த கட்சியின் தூண்டுதலும் இல்லாமல் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தை மாணவர்கள் தீவிரப்படுத்தவேண்டும்.
ஏனெனில் 1942 ஆம் ஆண்டு சுதந்திர போராட்டத்திலும், 1965 ஆம் ஆண்டு மொழி போராட்டத்திலும் மாணவர்கள் உறுதுணையாக இருந்து உள்ளனர். ஈழத் தமிழர்களுக்கு இந்த போராட்டத்தின் மூலம் நிம்மதி கிடைத்து உள்ளது. ஈழத்தமிழர்களுக்கு அனைத்து தமிழர்களும் உதவ முன்வரவேண்டும்.
எதிர்வரும் 12 ஆம் நாள் புதுடில்லியில் .தி.மு.. சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!
ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவர் இராமதாஸ் அளித்த பேட்டியின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:
சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக முதலமைச்சர் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாமல் இருக்கிறதே என்று பேசினார்.
மத்திய அரசாங்கத்தை நீங்கள் நிர்ப்பந்தம் செய்து போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெப்ரவரி 15 ஆம் நாள், தி.மு.. பொதுக்குழு கூட்டி முடிவெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளீர்கள்.
இடைப்பட்ட 3 வாரத்தில் இலங்கையில் தமிழர்கள் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாக போகிறார்களோ? ஏன் இந்த தாமதம். கலைஞர் உடனடியாக சில முடிவுகளை எடுக்க வேண்டும். நமது வேண்டுகோள் வேறு விதமாக இருக்க வேண்டும்.
மத்திய அரசாங்கத்திடம் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்கு பதிலாக ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழம் என்ற நிலைப்பாட்டை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
இது தி.மு..விற்கு புதிதல்ல. தனி ஈழம் தான் இலங்கை இனச்சிக்கலுக்கு தீர்வு என்று ஏற்கனவே தி.மு.. அறிவித்து பல மாநாடுகள், பேரணிகள், நடத்தி இருக்கிறது. அந்த பழைய நிலைப்பாட்டையே தி.மு.. மீண்டும் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்க்கிற தீர்வு கிடைக்கும.என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!
நாட்டின் உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்கு அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர், இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எழுத்தாளர் ஜெயகாந்தன் உட்பட 30 பேர் பத்ம பூஷன் விருதுக்கும், நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் விவேக், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோனி உட்பட 93 பேர் பத்மஷ்ரீ விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை செய்வோருக்கு, ஆண்டுதோறும் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அனில் ககோட்கர், மாதவன் நாயர், சமூக சேவகி சகோதரி நிர்மலா உள்ளிட்டோர் பத்மவிபூஷன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எழுத்தாளர் ஜெயகாந்தன், சமூக சேவகி சரோஜினி வரதப்பன், சிற்பி கணபதி ஸ்தபதி, துப்பாக்கி சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்படுகின்றன. முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், நடிகர் விவேக், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், கர்நாடக சங்கீத பாடகி அருணாசாய்ராம் உள்ளிட்டோருக்கு பத்மஷ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!
world

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மத்திய கிழக்கிற்கான தனது தூதுவரை அடுத்த வாரமளவில் அப் பிராந்தியத்திற்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீன அமைதி முயற்சிகளை மீண்டும் விரைவாக ஆரம்பிப்பதற்கான ஒரு முயற்சியாகவே இவ் விஜயம் அமையவுள்ளது.
ஒபாமாவினால் நியமிக்கப்பட்ட தூதுவர் ஜோர்ஜ் மிற்செல் தனது விஜயத்தின் போது எகிப்து, இஸ்ரேல், மேற்குக்கரை மற்றும் ஜோர்தான் ஆகியவற்றின் தலைவர்களை சந்திப்பாரென மேற்குலக மற்றும் அரேபிய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஹமாஸ் போராளிகளுடன் இவர்கள் நேரடித் தொடர்பு எதனையும் ஏற்படுத்த மாட்டாரெனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இவர் சவூதிஅரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்வாரெனவும் ஆனால், சிரியாவுக்கு செல்ல மாட்டாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தனது பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அதற்கான முழுப்பொறுப்பையும் தனது அரசாங்கம் ஏற்குமென பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
825 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பிலான அனைத்து தீர்மானங்களும் புதிய இணையத்தளத்தில் வெளியிடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக வானொலி மற்றும் இணையத்தினூடாக ஆற்றிய உரையிலேயே ஒபாமா இவ் உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
அத்துடன் இத் திட்டத்திற்கு பெப்ரவரி நடுப்பகுதியில் காங்கிரஸ் அங்கீகாரம் வழங்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா சந்தித்துள்ள இந் நெருக்கடிக்கு முன்னெப்போதும் எடுத்திராத நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமெனவும் அவர் வலியறுத்தியுள்ளார்.
கடந்த டிசெம்பரில் 5,24,000 பேர் வேலைகளை இழந்ததைத் தொடர்ந்து அங்கு வேலைவாய்ப்பின்மை வீதம் 7.2 வீதமாக அதிகரித்துள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் மிகக் கூடியளவாக 2.6 மில்லியன் பேர் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த மீட்புத் திட்டம் அடுத்த சில வருடங்களுக்குள் 4 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குமென ஒபாமா தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!
ஹமாஸ் போராளிகளுக்கெதிரான இஸ்ரேலின் தாக்குதல்களின் பின்னர் முதற் தடவையாக .நாவினால் நிர்வகிக்கப்படும் காஸாவிலுள்ள பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
சுமார் 2 இலட்சம் சிறுவர்கள் வகுப்புகளுக்கு சமுகமளிப்பார்களென எதிர்பார்க்கப்டுகிறது.
காஸாவின் மீது இஸ்ரேல் மூன்று வாரங்களாக தொடர்ந்து நடத்திய தாக்குதல்களினால் தமது வீடுகளை இழந்த பெரும்பாலான பாலஸ்தீனர்கள் பாடசாலைகளிலேயே தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் .நா மற்றும் வெளிநாடுகளின் உதவிப் பணியாளர்கள் காஸாவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இஸ்ரேல் நீக்கியுள்ளது.
இதேவேளை 84 தொன் நிவாரணப் பொருட்களுடன் எகிப்தை வந்தடைந்துள்ள 25 தென்னாபிரிக்க மருத்துவப் பணியாளர்களை காஸாவுடனான ரபாஹ் எல்லையில் எகிப்தின் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து வைத்திருப்பதாக முறையிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க அரசாங்கம் மற்றும் தேவாலய திருச்சபை ஆகியவற்றின் ஆதரவுடன் இயங்கும் இக் குழு மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் உணவு வகைகளைக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காஸாவில் .நாவினால் நிர்வகிக்கப்படும் 200 பாடசாலைகளில் 30 பாடசாலைகள் தாக்குதல்களினால் சேதமடைந்துள்ள அதேவேளை மேலும் சில பாடசாலைகளில் தமது இருப்பிடங்களை இழந்த மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். எஞ்சியுள்ள பாடசாலைகளே நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளன. வகுப்புகளுக்கு சமுகமளித்திருந்த மாணவர்கள் தாக்குதல்களின் போது தாம் பார்த்ததும் கேட்டதுமான திகிலூட்டும் சம்பவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலின் தாக்குதல்களில் 400 சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் 1800 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.