தொடரும் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல்: இன்றும் 4 பொதுமக்கள் பலி; 10 பேர் படுகாயம்

வன்னியில் சிறிலங்கா படையினர் இடைவிடாது தொடர்ச்சியாக நடத்திவரும் எறிகணைத் தாக்குதல்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் பேரவலப்பட்டு வருகின்ற நிலையில் இன்றும் 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விசுவமடு தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

உடையார்கட்டு, இருட்டுமடு குரவில் ஆகிய பகுதிகள் மீது தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவு தொடக்கம் இன்று காலை 10:00 மணி வரை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதயறூபி (வயது 28)

வெலிஸ்கோ (வயது 35)

வேந்தன் (வயது 33)

சைலா (வயது 25)

விஜிதா (வயது 29)

குணநந்தன் (வயது 28)

நிறோஜினி (வயது 18)

துவிதா (வயது 28)

பிறேமா (வயது 25)

நாகேந்திரம் (வயது 31)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.