அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் ஐவர் பலி!

பாகிஸ்தானின் வடமேற்கே ஆப்கானுடனான எல்லைக்கு அருகே, அமெரிக்காவின் ஏவுகணை என்று சந்தேகிக்கப்படும் ஏவுகணை ஒன்று தாக்கியதில், 5 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் நடத்தப்படும் முதலாவது ஏவுகணைத்தாக்குதல் இதுவாகும்.

அல்கைதா அமைப்பினரும், தலிபான்களும் பலமாகத் திகழ்வதாக கருதப்படும், வடக்கு வசிரிஸ்தான் பிராந்தியத்தில், மிர்அலி நகருக்கு அருகே கிராமப்புற வீடு ஒன்றை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.