வன்னி நிலப்பரப்பில் குறுந்தூர ஏவுகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன

வன்னியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக குறுந்தூர ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிவப்பு நிற சுவாலைகளுடன் வரும் இந்த ஏவுகணைகள் பாரிய சத்தத்துடன் வீழ்ந்துவெடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

வன்னி நிலப்பரப்பை இலக்கு வைத்து மிகநீண்ட தூரத்தில் இருந்து இவை ஏவப்படுவதாகவும் ஏனென்றால் இவை ஏவப்படும் சத்தத்தை தம்மால் செவிமடுக்க முடியாது உள்ளதாகவும் உள்ளுர்வாசிகள் தெரிவிக்கின்றார்கள். உள்நாட்டுக்குள்ளேயே ஏவுகணைகளைப் பயன்படுத்தும் ஒரே ஒரு நாடு இலங்கைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.