காசா மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.400 கோடி வேண்டும் – ஐ.நா.

பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட இழப்பை மதிப்பீடு செய்யவும், நிவாரண உதவிகளின் தேவையை கண்டறியவும் ஐ.நா. அதிகாரிகள் குழு காசா சென்று உள்ளது.

பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய 22 நாள் தாக்குதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. காசா பகுதியில் உள்ள 3 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கவும், வீடுகளை கட்டி தரவும் ரூ.400 கோடி நிதி உதவி தேவைப்படுவதாக காசா அமைப்பு இதை கோரிக்கையாக உலக நாடுகளுக்கு அறிவித்துள்ளது.

22 நாட்கள் நடந்த போரில் 460 சிறுவர்கள், 106 பெண்கள் உள்பட 1340 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள். 5320 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 1855 பேர் சிறுவர்கள். 795 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.