இராணுவ உதவி கோரி பாகிஸ்தானுக்கு கோத்தபாய பயணம்

சிறிலங்காவுக்கு இராணுவ உதவி கோரி சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் அந்நாட்டு அமைச்சர் ரக்மான் மலிக்கை கோத்தபாய ராஜபக்ச சந்தித்துப் பேசினார்.

இரு நாடுகளிடையே அனைத்து நிலைகளிலும் இராணுவ கூட்டுறவு தேவை என்று இச்சந்திப்பின் போது கோத்தபாய ராஜபக்ச வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின்போது, இராணுவ பயிற்சி, புலனாய்வு தகவல்கள் பரிமாற்றம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டன.

பாகிஸ்தான் தொடர்ந்து அளித்து வரும் இராணுவ உதவிக்கு நன்றி தெரிவித்திருக்கும் கோத்தபாய ராஜபக்ச அந்நாட்டின் ஆயுத தளபாட உற்பத்தி பிரிவின் தளபதியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.