கென்யாவில் கொண்டாட்டம் : அமெரிக்காவிடம் இருந்து அதிக உதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பு

கொகேலா : ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதை முன்னிட்டு கென்யாவில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஒபாமாவின் தந்தை கென்யாவின் கொகேலா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

ஒபாமாவின் பூர்வீகம் கென்யா என்பதால் அவர் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதை மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். ஒபாமா பதவி ஏற்றால் தங்கள் நாட்டிலுள்ள வறுமை ஒழியும் என அவர்கள் நம்புகின்றனர். அமெரிக்காவிலிருந்து ஆப்ரிக்காவிற்கு அதிக உதவி கிடைக்கும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அங்குள்ள ஆண்களும் பெண்களும் நடனமாடியும், குழந்தைகள் ஒபாமாவின் படங்களை கையில் வைத்துக் கொண்டும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.