ஆஸ்திரேலிய தீவில் கடும் பூகம்பம்

சிட்னி 19: ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ கலேடோனியா பகுதியில் அமைந்துள்ள லாயல்டி தீவில் இன்று காலை கடும் பூகம்பம் தாக்கியதாக அமெரிக்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலுக்கு அடியில் 52 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோளில் 6.9 என்ற அளவில் பதிவானதாக அது கூறியுள்ளது.

எனினும் இந்த பூகம்பம் காரணமாக சுனாமி தாக்குதல் எச்சரிக்கை எதுவும் உடனடியாக விடுக்கப்படவில்லை.

இந்த பூகம்பம் காரணமாக உயிரிழப்போ பொருட் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.

மிகவும் பின்தங்கிய பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டதால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஆஸ்திரேலிய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

Source & Thanks : maalaisudar.com

Leave a Reply

Your email address will not be published.