13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு வடக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு: ரோஹித்த

13 ஆவது திருத்தச் சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு எட்டப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனிடம் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டமொன்று குறித்த இலங்கையின் முனைப்பு பாராட்டுக்குரியதென சிவ்சங்கர் மேனன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு காரியாலயத்தில் வெளிவிவகார அமைச்சருக்கும், சிவ்சங்கர் மேனனுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதென சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனனுடனான சந்திப்பின்போது யுத்த நிறுத்தம் குறித்து ஓரு வார்த்தைகூட பேசப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.