சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் புலிகளை தோற்கடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: சரத் பொன்சேகா

எதிர்வரும் சிங்களப் புத்தாண்டு தினத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடிக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றால் நிச்சயமாக விடுதலைப் புலிகளை விரைவில் தோற்கடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது பதவிக் காலத்திற்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தாம் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.