புதிய அதிபர் ஒபாமா மீது அமெரிக்கர் அதிக நம்பிக்கை

வாஷிங்டன்: மோசமான நிலையில் உள்ள அமெரிக்காவை புதிய அதிபர் பராக் ஒபாமா நல்ல நிலைக்கு கொண்டு வருவார் என, 80 சதவீத அமெரிக்கர் கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவையொட்டி, சி.என்.என்., தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில் கூறப் பட்டுள்ளதாவது: ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட, அமெரிக்கா தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. அதை புதிய அதிபர் பராக் ஒபாமா மாற்றிக் காட்டுவார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா சிறப்பான இடத்தைப் பிடிக்கும். ஒபாமா அதிபராக பதவியேற்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக 68 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதிபர் பதவியேற்றதும், ஒபாமா நிகழ்த்தும் உரை மிகச் சிறந்ததாக இருக்கும் என, கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 85 சதவீதம் பேர் கூறினர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.