முல்லைத்தீவு மக்கள் குடியிருப்பு மீது மீண்டும் கிளஸ்டர் குண்டுத்தாக்குதல்

முல்லைத்தீவு பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது கடந்த வாரம் இலங்கை விமானப்படையினர் தை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த குண்டுகள் சில வெடிக்காத நிலையில் மக்கள் குடியிருப்பு பிரதேசங்களில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.

அண்மையில் நோர்வேயில் கிளஸ்டர் பாவனைக்கு தடைக்கு ஆதரவாக இடம்பெற்ற மாநாட்டில் இலங்கை அரசும் கலந்துகொண்டு தடைக்கு ஆதரவாக கையொப்பம் இட்டமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.