அகமதாபாத்தில் 4 குண்டுகள் கண்டெடுப்பு

அகமதாபாத் : குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வெடிக்காத 4 குண்டுகளை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

அகமதாபாத்தில் உள்ள கரஞ்ச் பகுதியில் அஞ்சலக அலுவலகம் எதிரே இருந்த கண்டெய்னரில், சந்தேகத்திற்கிடமான வகையில் சில பொருட்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்த குஜராத் காவல்துறையினர், அங்கு சோதனை நடத்தி வெடிக்காத நிலையில் இருந்த 4 நாட்டு குண்டுகளை கண்டுபிடிக்கப்பட்டதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

அவை உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.