ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (14.01.09) செய்திகள்

 கொடூரமான ஒரு போர்ச் சூழலுக்கு முகம் கொடுத்து தாங்கொணா வேதனைகளை வன்னியிலே எமது மக்கள் அனுபவித்து வரும் இச்சூழ்நிலையில் எமது மக்கள் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து கஷ்டங்கள் தீருவதற்கான பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் . சந்திரநேரு கோரியுள்ளார்.
இது குறித்து

அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது தாய்மொழியாம் தமிø காப்பதற்கும் தமிழர்களின் தாயகத்தினை மீட்பதற்கும் எமது மக்கள் ஒவ்வொருவரும் காலத்தின் கட்டாயத்தினை உணர்ந்து உணர்வோடும் உறுதியோடும் காத்திரமான பங்களிப்பினை வழங்குவதற்கான காலம் வந்துவிட்டது. இத் தருணத்திலேயே உலகத் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளுக்கு வழிசமைக்க இத் திருநாளில் உறுதி பூணுவோம்.

இத் திருநாளில் பட்டாசு கொளுத்துவதிலும் வாண வேடிக்கைகளில் ஈடுபடுவதையும் தவிர்த்து விட்டு சுதந்திர தேசத்திற்கான பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். அத்துடன் ஆயிரம் ஆயிரம் சுமைகளைத் தாங்கி நாளும் பொழுதும் தமது இன்னுயிர்களை இக் கொடிய யுத்தத்திற்கு பலியாக்கிக் கொண்டிருக்கும் எமது வன்னி மக்கள் எமது தாயகத்தில் சுதந்திரக் காற்று நிம்மதியாய் வீசும் வரை எமது உடல், உழைப்பு, வளம் அனைத்தையும் அர்ப்பணித்து எமது சுதந்திர தேசத்திற்கான அங்கீகாரம் பெறும் வரை முழு மூச்சுடன் உழைப்போம் என இத் திருநாளில் உறுதி பூணும்படி உலக வாழ் தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கின்றேன். அனைவருக்கும் சாந்தியும்,சமாதானமும் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ். குடா நாட்டுக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அண்மைக் காலமாக படை நகர்வுகளை முன்னெடுத்த படைவீரர்களுக்கு நேரில் வாழ்த்துத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின போது,; ஆனையிரவுப் பகுதியை படையினர் கைப்பற்றியது வரையிலான பாதுகாப்பு முன்னெடுப்புகள் குறித்தும் இராணுவத்தளபதி கேட்டுத் தெரிந்து கொண்டார்.

மேஜர் ஜெனரல் எம்.சி.எம்.பி. சமரசிங்க, பாதுகாப்புப் படைத் தளபதி, மற்றும் படை அதிகாரிகள் ஆகியோர் பலாலி விமான நிலையத்தில் இராணுவத்தளபதியை வரவேற்றனர்.

சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட படைத்தளபதிகள், தற்போதைய நிலவரங்கள் குறித்து ihணுவத் தளபதியிடம் விரிவாக எடுத்துரைத்தனர். இதனையடுத்து அண்மைக்காலமாக படை முன்நகர்வுகளை நடத்தி வெற்றிகொண்ட படைத் தரப்பினரை இராணுவத் தளபதி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

இராணுவத் தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இராணுவத் தளபதியுடன் குடாநாட்டுக்குச் சென்றிருந்தனர்
!!!!!!!!!!!!!!
வன்னியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்தப்பட்டுவரும் விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலினால் நாள்தோறும் மக்கள் பலியாவதுடன் பெருமளவானோர் காயமடைந்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மீதான தாக்குதல்களை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

வன்னியில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல் மற்றும் விமானக் குண்டு வீச்சில் பொதுமக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ள நிலையிலேயே யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஜனாதிபதிக்கு இந்த அவசர கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரட்ணசிறிவிக்கிரமநாயக்க, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வவுனியா மாவட்ட இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய, அமெரிக்கத் தூதுவர், பிரித்தானிய தூதுவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கான கடிதத்தில் ஆயர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் பரந்தன் முதல் முல்லைத்தீவு வரையான 35 வீதியை அண்டிய பகுதிகள் மற்றும் தருமபுரம், புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் படையினரின் ஷெல் தாக்குதல் மற்றும் விமானக் குண்டு வீச்சினால் பெரும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலினால் நாள்தோறும் பலர் கொல்லப்பட்டும் பெருமளவானோர் காயமடைந்தும் வருகின்றனர். இடம்பெயர்ந்துள்ள மக்கள்பாதுகாப்புத் தேடி எங்கு செல்வது என்று தெரியாத நிலையில் தவிக்கின்றனர்.

நாம் மக்களை தேவாலயங்கள், ஆலயங்களுக்கருகில் ஒன்று கூடுமாறு அவர்களை அழைக்கலாம். அங்கு எமது குருவானவர்களும் உள்ளனர். தற்போதைய நிலையில் தேவாலயங்களும் கோவில்களும் அகதிகளுக்கான புகலிடமாக அமையலாம்.

எனவே, பொதுமக்களின் பகுதி மீதான ஷெல்தாக்குதல் மற்றும் விமானக் குண்டு வீச்சு என்பவற்றை அரசாங்கம் நிறுத்த வேண்டும். மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இதனால் பொதுமக்களின் பிரதேசங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்
!!!!!!!!!!!
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து நேற்றுக் காலை 86 தமிழ் மக்கள் யாழ். பாதுகாப்புத் தரப்பினரிடம் தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரு பிரிவினராக இவர்கள் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவது பிரிவினர் 5 ஆண்களும் 6 பெண்களும் 6 சிறுவர்களும் அடங்கலாக 17 பேர் நேற்றுக் காலை 7.00 மணியளவில் வந்து சேர்ந்ததாகவும், இரண்டாவதாக 23 ஆண்கள் 21 பெண்கள் 25 சிறுவர் அடங்கலாக 69 பேர் 8.45 மணியளவில் வந்து சேர்ந்ததாகவும் படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

முகமாலை முதல் ஆனையிரவு வரையான விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டு யாழ்ப்பாணம்கண்டி 9 பாதை முற்றாகப் பொதுமக்கள் பாவனைக்காக விடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தமது பாதுகாப்பான வாழ்வாதாரத்தைத் தேடி அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேரும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வந்துசேரும் மக்களுக்கான தங்குமிட, உணவு, மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவை குறித்த நடவடிக்கைகளைத் தாம் ஏற்கனவே மேற்கொண்டு வருவதாகப் படைத்தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன
!!!!!!!!!!!!!!!!
கெரவலப்பிட்டிய இராணுவ முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ரி56 ரக துப்பாக்கி மற்றும் ரவை கூடுகளுடன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிப்பாய் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரினால் எடுத்துச் செல்லப்பட்ட துப்பாக்கி கரந்தெனிய பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இவர் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடும் நோக்கில் இந்த துப்பாக்கியை கொண்டு சென்றிருக்கலாம் எனவும் கரந்தெனிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
!!!!!!!!!!!
இலங்கையின் இன்றைய நில வரம் குறித்து இந்தோனேசிய அதிகாரிகளுக்கு விளக்கம் அளிப் பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயம் மேற் கொண்டுள்ளர்.
இரு நாடுகளுக்குமிடையிலான உளவுப் பரிமாற்றம், கூட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, இராணுவ பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இந்தோனேசிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
விஜயத்தின் போது இலங்கையின் இன்றைய நிலவரம் குறித்த இந்தோனேசிய அதிகாரிகளுக்கு உண்மையான நிலவரங்களை மறைத்து உண்மைக்கு மாறாக விளக்கம் கூறியதுடன் தமிமீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்டுவரும் யுத்த நடவடிக்கையால் தமிழ் மக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லையெனத் பொய்யான பரப்புரையை மேற்கொண்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
!!!!!!!!!!!!!!
கொழும்பு அதியுயர் பாதுகாப்பு வலய பகுதியில் இரு தமிழர்களை காணவிலலை என காவல்நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த சின்னத்தம்பி ஜெய்லி அற்புதநாதன் என்ற இரு பிள்ளையின் தந்தையே காணாமல்போயுள்ளார், இதேபோன்று பொரளையை சேர்ந்த மூன்று பிள்ளையின் தந்தையான ஆர்.பரமானந்தன் என்பவர் காணாமல்போயுள்ளார்.
இரு தமிழர்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
யாழ், வடமராட்சி பகுதியில் இராணுவத்தினரும் காவல் துறையினரும் சேர்ந்து சுற்றிவளைத்து மேற்கொண்ட தேடுதலில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நேற்று செவ்வாக்கிழமை காலை9.00 மணியிலிருந்து 12.00 மணிவரை வடமராட்சி, உடுப்பிட்டி, கரவெட்டி, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் விசாரணைக்குட்படுத்தியதுடன் மேலதிக விசாரணைக்காக 4பேர் இராணுவ முகாமிக்கு அழைத்துச் சென்றுள்ளனர
!!!!!!!!!!!!!!!!!
வடமராட்சிக் கிழக்கு கட்டைக்காடு பகுதியை அண்மித்துள்ள சிறிலங்காப் படையினர், கட்டைக்காடு தேவாலயத்தை உடைத்து முற்றாக சேதப்படுத்தி உள்ளதுடன் கட்டைக்காடு பகுதியில் உள்ள மக்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து காவல் அரண்களையும் அமைத்து வருகின்றனர்.
!!!!!!!!!!!!
வடமராட்சி, உடுப்பிட்டி, கரவெட்டி, வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் நேற்றுக் காலை சிறிலங்காப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
காலை 9.00 மணியிலிருந்து 12.00 மணிவரை இடம்பெற்ற இந்தத் தேடுதலின் போது 4 பேர் விசாரணை என்ற போர்வையில் படைமுகாமிற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ளனர்.
!!!!!!!!!!!!!!
ஆனையிறவுப் பகுதியைப் பார்வையிட வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. படையினரால் வல்வளைப்புச் செய்யப்பட்டுள்ள ஆனையிறவுப் பகுதிக்கு செல்ல அனுமதி தருமாறு பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பித்த போதே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!
இன்று புதன்கிழமையன்று பிற்பகல் 3.30 மணியிலிருந்து (15.30) ஐந்து மணிவரை (17.00) பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னிலையில் கண்டன ஒன்று கூடல் நடைபெறுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டாலும் மாலை 5.00 மணிக்குப் பின்னர் முகமாலை ஊடாக வாகனங்கள் எவையும் குடாநாட்டிற்குள் உள்நுழைய அனுமதிக்கப்படமாட்டாது எனவும் வழமையான பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் முகமாலையில் பின்பற்றப்படும் எனவும் யாழ்குடாவிற்கான புதிய சிறிலங்காவின் புதிய படைத்தளபதி மேஜர் ஜனரல் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
நீதிமன்றங்கள் வழங்கும் உத்தரவுகளை ஏற்று நடைமுறைப்படுத்தாமல், நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரமும் அரசும் நடந்துகொள்ளுமானால் நாடு சட்டம், ஒழுங்கு இல்லாத தேசமாகும் என நேற்று உயர்நீதிமன்ற அமர்வின் போது பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஆதங்கத்தோடு எச்சரிக்கை செய்தார்.
எரிபொருள் விலை தொடர்பாக சில வரையறைகளை விதித்து, பெற்றோலை லீற்றர் நூறு ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்யும்படி உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவை மூன்று வாரங்கள் கடந்தும் நடைமுறைப்படுத்தாமல் அரசு உதாசீனப்படுத்தி விட்டது.
அந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதம நீதியரசர் மேற்படி கருத்தைப் பகிரங்கமாக வெளியிட்டார்.
!!!!!!!!!!!!!!!
புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொள்ளும் சதித்திட்டங்களை உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் முன்னெடுத்துச் செல்லும் கைக்கூலிகளாகமுகவர்களாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜே.வி.பியினரும் செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு :-
முன்னர் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் பாரிய சேதங்களை ஏற்படுத்திவந்தார். இப்போது அவரால் அவ்வாறு செய்ய முடியாது.
புலிகள் யுத்த ரீதியாக பலத்த தோல்விகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்களின் இறுதி மூச்சு மிக விரைவில் அடங்கவுள்ளது. இந்தநிலையில் பிரபாகரனால் எந்தவிதமான தாக்குதல்களையும் மேற்கொள்ள முடியாது.
பிரபாகரன் தற்போது மேற்கொள்ளும் சதித்திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்படுகின்றன. இதனால் அவரின் சதித்திட்டங்களை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அரங்கேற்றும் கையாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜே.வி.பியினரும் செயற்படுகின்றனர்.
தேசப்பற்றாளர்கள் போல் தங்களைக் காட்டிக்கொண்டு தேசத்துரோகச் செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபாகரனின் சதித்திட்டங்கள் மாத்திரமன்றி அவரின் கையாட்களின் செயற்பாடுகளும் அரசால் தோற்கடிக்கப்படும். அதற்கான சக்திகளை நாம் அரசுக்கு வழங்குவோம். – என்றார்.
!ù!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பெப்ரவரி நான்காம் திகதி வரலாற்றில் என்றுமே கிடைத்திடாத மாபெரும் யுத்த வெற்றி ஒன்று இந்த நாட்டுக்குக் கிடைக்கவுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
அந்த வெற்றி என்னவென்று அறிய நாட்டு மக்களை ஆவலுடன் காத்திருக்குமாறு மேலும் கூறியுள்ளது அரசு.
கொழும்பில் நேற்று அரசால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டளஸ் அழகப்பெருமவே இத்தகவலைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:-
எமது அரசு எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிலும் சரி, யுத்தத்திலும் சரி வெற்றிப் பாதையை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கின்றது.
மாகாணசபைத் தேர்தலை எடுத்துக்கொண்டால் .தே.கட்சியின் நிலைமை மிக மோசமாகவுள்ளது. அக்கட்சியின் பிரசாரக் கூட்டங்கள் எவற்றையும் காணக்கூடியதாக இல்லை.
அக்கட்சியின் ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் எம்முடன் வந்து இணைந்து கொண்டிருக்கின்றனர். இது வரை அதிக எண்ணிக்கையிலான .தே. கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் எம்முடன் வந்து இணைந்துள்ளனர்.
வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல் களத்தில் அரசுக்கு அறவே போட்டி கிடையாது. இதை நினைத்து நாம் கவலைப்படுகிறோம்.
என்ன செய்வது? .தே.கட்சிக்கான மக்கள் ஆதரவு குறைந்துள்ளதால் அரசுக்கான ஆதரவு கூடி தேர்தலில் போட்டி இல்லாமல் போயுள்ளது.
நாம் மிகவும் இலகுவாக வெற்றிபெறப் போகிறோம். .தே.கட்சியை இந்தத் தேர்தலிலும் யாராலும் காப்பாற்ற முடியாது.
தேர்தல்களில் மாத்திரமன்றி யுத்தத்திலும் நாம் பாரிய வெற்றிகளைக் குவித்து வருகிறோம்.
அண்மையில் கிளிநொச்சியையும் பிடித்த நாம் வடக்கில் எஞ்சியுள்ள அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றி புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவோம்.
தினமும் யுத்த வெற்றிகளைக் குவித்து வரும் நாம் சுதந்திரதினமான பெப்ரவரி 4 ஆம் திகதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் யுத்த வெற்றி ஒன்றை இந்த நாட்டுக்குப் பெற்றுக் கொடுப்போம்.
அந்த வெற்றி என்னவென்று அறிய இந்நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருக்க வேண்டும்என்றார்
!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவை நோக்கி மும்முனைகளிலும் கடும் சமர் நடைபெற்று வருவதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
முள்ளியவளை, குளமுறிப்பு, தோணிக்கல், ஐயன் பொருமாள் மற்றும் ஊரியான் பகுதிகளில் இந்த மோதல்கள் நடைபெற்று வருகிறது.
புதுக்குடியிருப்பு பகுதியிலும் மோதல்கள் நடைபெற்றுள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது.
குளமுறிப்பு பகுதியில் நடைபெற்ற கடும் சமரில் புலிகளின் நிர்வாக முகாமொன்றும், பயிற்சி முகாமொன்றும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்தனர்.
முள்ளியவளை பகுதியில் தண்ணீரூற்று மற்றும் முள்ளியவளை ஆஸ்பத்திரிகளை 59 ஆவது படையணியினர் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர்.
இந்தப் பகுதியில் 48 மணிநேரம் இடம் பெற்ற கடும் மோதலையடுத்தே திங்கட்கிழமை மாலை ஆஸ்பத்திரியை படையினர் தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்ததாகவும் படையினர் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு நோக்கி 57 ஆவது 58 ஆவது மற்றும் 59 ஆவது படையணிகள் முன்னேறி வருகின்றன. இந்தப் படையணிகளுடன் விஷேட படையணிகளான 2,3,4 ஆம் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
58 ஆவது படையணி வட்டக்கச்சி வடக்கிலிருந்து தர்மபுரம் பகுதியை நோக்கி முன்னேறி அந்தப் பகுதியை சுற்றி வளைத்துமுள்ளனர்.
விஷேட படையணி3 இரணைமடு பகுதியில் முன்னேறி விடுதலைப்புலிகளின் கடைசி விமான ஓடுபாதைக்கு ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
55 ஆவது படையணி, வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி வழியாக முல்லைத்தீவு நோக்கிய முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளிநாடுகளில் தங்களது செயற்பாடுகளை அதிகரிக்கக் கூடுமென வெளிவிவகார அமைச்சின் நிரந்தர செயலாளர் பாலித கொஹன்ன தெரிவித்துள்ளார்.
ஏனைய பங்கரவாத அமைப்புக்களைப் போன்று புலம்பெயர் மக்களை பயன்படுத்தி நிதி திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை முறியடிக்க இராஜதந்திர ரீதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிவிகார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!
அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்குவோர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசாங்கம் யுத்த வெற்றிகளை ஈட்டிவரும் சந்தர்ப்பத்தில் அதனை இழிவுபடுத்தும் வகையில் செயற்படும் நபர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடக அடக்குமுறைச் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களை மீள் குடியமர்த்தும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

!!!!!!!!!!!!!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை தொடர்பில் எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புதிய இடதுசாரியின் முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு வாக்குச் சாவடிகளில் விசேட கண்காணிப்பாளர்களை நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

!!!!!!!!!!!!!
india

 பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டெல்லி வருகை தந்துள்ள பிரிட்டீஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் வலியுறுத்தி உள்ளார்.

பிரிட்டீஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் இன்று டெல்லி வருகை தந்தார். பின்னர், அவர், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப்முகர்ஜியுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மும்பை தாக்குதலில் லஷ்கர்தொய்பா அமைப்பிற்கு முக்கிய பங்கிருப்பது தெளிவாகத் தெரிவதாகவும், எனவே, அந்த அமைப்பை வேரோடு அழிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார். எனவே, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மிலிபேண்ட் வலியுறுத்தினார்.
!!!!!!!!!!!!!!!!!!
மும்பையில் நடத்தியது போல, டெல்லி நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வி..பி.க்கள் சிலரை பிணைக்கைதிகளாகப் பிடிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் மத்திய அரசை உஷார் படுத்தியுள்ளனர்.

டெல்லி மற்றும் குஜராத் மாநிலம் சூரத் நகரில் தாக்குதல்கள் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளது இந்திய உளவுத்துறைக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் டெல்லியில் இரண்டு நட்சத்திர ஹோட்டல்களைக் குறி வைத்துள்ளதாகவும், அப்போது, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை, மத்திய அரசிற்கு தெரிவித்துள்ளது. மேலும், அந்த தாக்குதலின்போது, வி..பி.க்கள் சிலரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து, இந்திய சிறைகளில் உள்ள தங்கள் சகாக்களை மீட்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து, டெல்லி மற்றும் சூரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
!!!!!!!!!!!!!!
: சத்யம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுவந்த அவுட் சோர்சிங் பணிகளை டாடா கன்சல்டன்சி நிறுவனத்திற்கு மாற்றி உள்ளதாக உலகவங்கி அறிவித்துள்ளது.

உலக வங்கி, தனது பல்வேறு அவுட்சோர்சிங் மற்றும் மென்பொருள் பணிகளை சத்யம் நிறுவனத்திற்கு அளித்திருந்தது. ஆனால், அந்நிறுவனம் அந்த பணிகளில் முறைகேடுகள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்நிறுவனத்துடனான வர்த்தகத் தொடர்புகளை நிறுத்தியது. இதனால் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து பணிகளையும் உலகவங்கி நிறுத்திவிட்டது. தற்போது, அந்த பணிகளை டாடா கன்சல்டன்சி நிறுவனத்திற்கு வழங்கி இருப்பதாக உலக வங்கியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!
இந்திய எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் பெருமளவில் படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு தக்க பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய படைகளும் குவிக்கப்பட்டு வருகிறது.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. இதுதொடர்பான ஆதாரங்களை இந்தியா அளித்தும், தீவிரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது. இதன்காரணமாக, எந்நேரமும் இந்தியா தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பீதியில், காஷ்மீரில் ஜீலம்செனாப் மற்றும் செனாப்ரவி ஆகிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படைகளைக் குவித்து வருகிறது. இதனிடையே, இந்திய ராணுவத்தின் 19வது படைப்பிரிவு பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகே நகர்த்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
!!!!!!!!!!!
world

 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜேக்கப் கெல்லன்பெர்கர், காசா நிலப்பரப்பில் நிலவும் மனித நேய நிலைமையை நேரில் காண அங்கு சென்றிருக்கிறார்.
இஸ்ரேலிய குண்டுவீச்சிலிருந்து தப்ப 90,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் வீடுகளைத் துறந்து வெளியேறியிருக்கிறார்கள் என்று காசாவில் உள்ள பாலத்தீன மனித உரிமைக் குழுவான அல் மிசான் கூறுகிறது.
காசாவில் உள்ள பிரதான மருத்துவமனைக்கு விஜயம் செய்த கெல்லன்பெர்கர், செம்பிறை மற்றும் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களையும் சந்தித்தார்.
.நா மன்றத் தலைமைச்செயலர் பான் கி மூன் போருக்கு முடிவு கட்ட முயல பேச்சுவார்த்தைகளை நடத்த மத்தியக் கிழக்குக்கு வருகைதர ஆயத்தமாகும் நிலையில் இவரது விஜயம் வருகிறது.
!!!!!!!!!!!!!!
 ஜிம்பாப்வே அரசாங்கம் தனது குடிமக்களுக்கு சுகாதார வசதிகளை செய்து தரும் தனது அடிப்படை கடமையை செய்யத் தவறுவதாக, மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் என்கிற சர்வதேச அழுத்தக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
ஜிம்பாப்வே நாட்டின் சுகாதாரம், குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரகற்றும் கட்டமைப்புகள் நிலைகுலைந்து போனதற்கு அதிபர் ராபர்ட் முகாபே அவர்களின் அரசாங்கம் தான் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அங்கே செயற்படக்கூடிய அரச மருத்துவ மனைகளே இல்லை என்றும், சமீபத்தில் அங்கே காலரா நோயில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக அரசாங்கம் கூறும் புள்ளிவிவரத்தை விட இறந்தவர்களின் எண்ணிக்கை மேலதிகமாக இருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த நிலையில் ஐநா மன்றம் இதில் உடனடியாக தலையிட்டு ஜிம்பாப்வே நாட்டின் சுகாதாரத்துறையை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும் இந்த அமைப்பு கோரியுள்ளத
!!!!!!!
போதைப்பொருட்களை கடத்துவர்களுக்கு புதிய ஒரு தண்டனையை, அதாவது, ரோமன் கத்தோலிக்க மதத்திலிருந்து வெளியேற்றுவதை, போப்பாண்டவரின் மூத்த ஆலோசகர் ஒருவர் யோசனையாக முன்வைத்திருக்கிறார்.
போதைப்பொருட்கள் உபயோகத்தால் கடத்த சில ஆண்டுகளில் பல ஆயிரம் பேர் இறந்தததுள்ளதுடன் மெக்சிகோவில் உள்ள கடத்தல் குழுக்கள் தொடர்பு படுத்தப்படும் நிலையில், மெக்சிகோ நாட்டிற்கு விஜயம் செய்யவிருக்கும், போப்பாண்டவரின் ஆலோசகர், கார்டினல் டார்சியோ பெர்டோன், அவ்விஜயத்துக்கு முன்னதாக இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த நாட்டில் போதைப்பொருட்கள் தூண்டிவிட்ட வன்முறைகள் காரணமாக ஏற்பட்ட பேரழிவைப் பற்றி வாட்டிகன் அச்சமடைந்திருக்கிறது என்று அவர் கூறினார்.
சேக்ரமண்ட் எனப்படும் சமயச்சடங்குகளைப் பெறுவது, மற்றும் பொதுப் பிரார்த்தனைகளில் கலந்துகொள்வது போன்றவற்றிலிருந்து தடை செய்யும் வழிமுறையான இந்த மத வெளியேற்றம், திருச்சபையின் மிக கடுமையான கண்டன வடிவம் என்று கார்டினல் பெர்டோன் வர்ணித்தார்.
in
!!!!!!!!!!!!
1 euro = 151.16sl /64.78in
1us $ =113.90sl / 48.81in
1swiss fr =101.98sl /43.70in
1uk pound =166.13 sl / 71.19in

Leave a Reply

Your email address will not be published.