பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு கோரிக்கை

சிறிலங்காவின் அகோர போர் வெறியினால் வன்னியிலே மக்கள் தாங்கொணா வேதனையை அனுபவிப்பதால் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்பு கோரியுள்ளது. இதன் அமெரிக்கா, ஐரோப்பிய, அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் நேற்று இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மக்கள் மிகநெருக்கமாகக் குவிந்துள்ள வன்னிப்பகுதி மீதான கடும் தாக்குதல்களுக்கு சிறிலங்காவின் ஒட்டுமொத்த இராணுவமும் தயாராகி வரும்வேளையில், அவ்வமைப்பின் பிரதிநிதிகள் விடுத்துள்ள வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

“வன்னியிலுள்ள தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் இன அழிப்புத் தாக்குதலைத் தடுக்கக்கூடிய அழுத்தம் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே வரமுடியும். சிறிலங்காவினால் நடத்தப்படும் இனத்தேசியப் போரானது புதுடில்லியின் மூலோபாயத்திலும் அதன் உலகப் பங்காளிகளின் தந்திரோபாயப் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் மீது கொண்டிருந்த மிகச்சிறிய நம்பிக்கையையும் இழந்துவிட்டனர். சிறிலங்காப் படைகள் கிளிநொச்சியை ஆக்கிரமித்த பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளே அவர்களையும்;, அவர்களது புவிசார் நலன்சார் செயற்பாடுகளையும் அம்பலப்படுத்திவிட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : sankathi.com

Leave a Reply

Your email address will not be published.