அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி செய்வதாக நீங்களும் கூறாதீர்கள்- ஈரான்

அமெரிக்கா ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள ஒபாமாவிடம் பதவி விலகவுள்ள புஷ் சுமத்திய குற்றச்சாட்டுகளை நீங்களும் சுமத்தாதீர்கள்? என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதன் மீது கடுமையான போர் நடவடிக்கையில் ஈடுபட புஷ் அரசாங்கம் முயற்சி எடுத்திருந்தது. எனினும் ஏனைய உலக நாடுகளின் தலையீட்டினால் அது தோல்வியடைந்தது.

புஷ் நிறுவாகத்தினால் சுமத்திய குற்றச்சாட்டுக்களை புதிதாக பதவி ஏற்கவுள்ள ஜனாதிபதியிடம் நீங்களும் இந்த தவறைச் செய்யாதீர்கள் என அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் ஒபாமா ஈரான்தான் உண்மையில் ஆபத்தான நாடு எனினும் அதோடு பேச்சுவார்த்தை நடத்தயிருப்பதாகவும் தெரிவித்தார்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.