பளைப் பகுதியில் சிறிலங்கா படையினரால் 33 பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளை பிரதேசம் சோரன்பற்று பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினரால் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 4 சிறுவர்கள், 9 பெண்கள் உட்பட 33 பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட அனைவரையும் படையினர் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றில் கொடிகாமம் பொலிஸார் ஆஜுர்படுத்தினர்.

சாவகச்சேரி நீதவான் விசாரணையின் பின்னர் கொடிகாமம் பொலிஸாரிடம் 33 பொதுமக்களையும் யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டதுடன், மருத்துவ பரிசோதனை முடிவடைந்தவுடன் அவர்களை கோப்பாயில் உள்ள நலன்புரி முகாமில் அரசாங்க அதிபரின் மேற்பார்வையுடன் கொண்டுசென்று சேர்க்குமாறும் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.