கருணா எனும் எட்டப்பன், விகடனில் இருந்து

யூதாஸ், எட்டப்பன் வரிசையில் இன்னொரு பெயராக ‘கருணா’வை சேர்த்துக்கொண்டுவிட்டார்கள் தமிழீழ ஆதரவாளர்கள்.

விநாயகமூர்த்தி முரளிதரன் என்பதுதான் கருணாவின் இயற்பெயர். புலிகள் அமைப்பில் சேர்ந்த பிறகு கருணா அம்மான் என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இருபது வருட நண்பர். புலிகளின் நடமாட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை அருகிலிருந்தே கற்றுக்கொண்ட கருணா, இன்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் செல்லப் பிள்ளை! ”உச்சபட்ச துரோகத்தின் உருவம் கருணா!” என்று கொதித்துப் போய்ச் சொல்லும் இலங்கையின் தமிழ் எம்.பி-க்கள் சிலர், கருணாவின் சதி வேலைகளை இப்படிப் பட்டியல் போடுகிறார்கள்.

”1983–ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்த கருணா, சாமர்த்தியமான

போர்த் தந்திரங்களை நிகழ்த்திக் காட்டினார். இதில் ஈர்க்கப்பட்ட தம்பி, அடுத்தடுத்து கருணாவுக்குப் பதவி உயர்வு கொடுத்து டாப் கமாண்டராக்கினார். ஒரு கட்டத்தில், அளப்பரிய நம்பிக்கையால் கருணாவை தன் மெய்க்காப்பாளராகவும் வைத்துக்கொண்டார். புலிகள் அமைப்பில் இந்தளவுக்கு வேறு யாரும் பெரும்பதவிகளை அடைந்ததில்லை. கிழக்கு மாகாண கமாண்டராக நியமிக்கப்பட்ட கருணா, எப்படியோ சிங்கள அரசின் நயவஞ்சக பேரத்துக்கு விலை போய்விட்டார். புலிகளுக்கும் கருணாவுக்கும் மோதல்கள் வந்த பிறகுதான் கருணா, ராஜபக்ஷேவுடன் கைகோத்ததாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால், புலிகள் அமைப்பில் நிரம்ப செல்வாக்கு பெற்றிருந்தபோதே அவரை சிங்கள வலை ரகசியமாக வீழ்த்திவிட்டது. கிழக்கு மாகாணத்தில் வசித்த முஸ்லிம்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்ட விவகாரம், புலிகள் அமைப்புக்கே கரும்புள்ளியாக இன்றளவுக்கும் உலகத்தால் சொல்லப்படுகிறது. ஆனால், அந்தக் கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியது கருணாதான். புலிகளின் சந்தேகக் கண் அவர் மீது விழுந்தவுடன், ‘அடுத்து மரணம்தான்’ என்று அலறிப் புடைத்து, ராஜபக்ஷேவிடம் தஞ்சமடைந்து விட்டார்.

அவரை எம்.பி-யாக்கி அழகு பார்க்கும் ராஜபக்ஷே, அவருக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்துகொடுக்கிறார். அதற்கெல்லாம் நன்றிக்கடனாக புலிகளின் சகல தந்திரங்களையும் ராஜபக்ஷேவுக்கு போட்டுக் கொடுத்து விட்டார் கருணா. இதனாலேயே சிங்கள ராணுவத்தால் கிளிநொச்சி வீழ்த்தப்பட்டது. ‘எந்த வழியே நுழையவேண்டும், எப்படியெல்லாம் தாக்கவேண்டும், சிங்கள ராணுவத்துக்கு சிம்மசொப் பன விஷயமான புலிகளின் கண்ணிவெடி எங்கெல்லாம் புதைக்கப்பட்டிருக்கும், தரைப்படையைத் தவிர்த்துவிட்டு விமானங்களின் மூலம் புலிகளின் பதுங்கு குழிகளை எப்படியெல்லாம் தவிடுபொடியாக்கலாம்’ என சிங்கள ராணுவத்துக்கு எல்லாவித யோசனைகளையும் வழங்கியதே கருணாதான்

குறிப்பாக, புலிகளுக்கு கப்பல்கள் மூலம் வருகிற ஆயுதங்கள் எந்த வழியாக வரும் என்பதையும், யார் யார் புலிகளுக்கு ஆயுத சப்ளை செய்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களையும் சிங்கள அரசிடம் மட்டுமல்லாது, சிங்கள ராணுவத்துக்கு உதவும் ஏழு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் தெரிவித்திருக்கிறார். இதில் இந்திய உளவுத் துறை அதிகாரிகளும்கூட உண்டு.

கருணாவை கிழக்கு மாகாண கமாண்டராக நியமித்ததோடு விட்டிருந்தால், இவ்வளவு ரகசியங்கள் அவருக்குத் தெரிய வந்திருக்காது. ஆனால், அவர் மீது வைத்த நம்பிக்கையால் தம்பி பிரபாகரன் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட அனைத்து மாகாணப் பாதுகாப்பு ரகசியங்களையும் கருணாவுக்கு தெரியப்படுத்தி இருந்தார். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ‘புலிகள் இயக்கத்தில் இருந்து கிழக்கு மாகாணங்களில் நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்க, முக்கியப் பொறுப்புகள் எல்லாம் வடக்கு மாகாணங்களுக்கு வழங்கப்படுவது நியாயமா?’ என்று கருணா அப்போது சிலரிடம் கொந்த ளித்துப் பேசியது, தம்பியின் கவனத்துக்கு எட்டியிருந்தது. அந்த மன வருத்தங்களை துடைக்கும் விதமாகத்தான் அவருக்கு எல்லாவிதமான உரிமைகளையும் வழங்கி இருந்தார் தம்பி.

2002-ம் ஆண்டு பத்திரிகையாளர்களை தம்பி சந்தித்தபோது, தன் பக்கத்திலேயே கருணாவைநிற்க வைத்து அழகு பார்த்தார். உலகத் தமிழர்கள் மட்டுமல்ல, சிங்கள அரசாங்கத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் கருணா மீது படிந்தது அப்போதுதான். இதையெல்லாம் மறந்து புலிகளைக் காட்டிக்கொடுக்க கருணா துணிந் திருப்பதுதான் மன்னிக்க முடியாத துரோகம். வளர்த்த கடா மார்பில் பாய்கிற கதைக்கு சிறந்த உதாரணம் கருணா!” என்கிறார்கள், இலங்கையில் உள்ள தமிழ் எம்.பி-க்கள் சிலர்.

புலிகள் தரப்புக்கு நெருக்கமானவர்களிடம் கருணா பற்றிக் கேட்டால், ”சிங்கள ராணுவத்துக்கு எல்லா விதத்திலும் அவர் கைப்பிள்ளையாக இருக்கிறார். ஆனால், புலிகளின் புதுப்புது வியூகங்களைக் கருணாவால் கனவிலும் யூகிக்க முடியாது. புலிகள் அமைப்பு தொடங்கப்பட்ட காலத்திலேயே, துரோகத்தின் வலிகளை உணர்ந்திருக்கிறார் பிரபாகரன். தன் உரிமைகளை சமமாகப் பிரித்துக் கொடுத்து உமா மகேஸ்வரனை சேர்மனாக்கினார். ஆனால், அவரோ, ‘பிரபாகரன் சர்வாதிகாரி’ என்று சொல்லித் தனி அமைப்பு கண்டார். அப்போதுகூட தம்பி நிலைகுலையவில்லை. பலருடைய துரோகங்களையும் பார்த்து மிகுந்த பக்குவத்தையும் எச்சரிக்கை உணர்வையும் கற்றிருப்பவர் தம்பி. இப்போதுகூட ‘பிரபாகரன் முல்லைத் தீவில்தான் பதுங்கி இருக்கிறார்’ என்று சிங்கள ராணுவத்திடம் கருணா சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால், தம்பி எங்கே இருக்கிறார் என்று புலிகள் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளுக்குக்கூடத் தெரியாது. கருணா மீது புலிகளின் உளவுப் படையினர் சந்தேகம் கிளப்பியபோதே அவரைச் சுட்டுக்கொல்ல முடிவெடுக்கப்பட்டது. தம்பிதான் அதைத் தடுத்திருக்கிறார்.

புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த கருணாலண்டனுக்குச் சென்றபோதே அவருடைய கதை முடித்துவைக்கப் பட்டிருக்கும். இத்தனைக்கும் லண்டனில் அவருக்குக் குறி வைத்தவர்கள் புலிகள் இல்லை. பொதுவான தமிழ் மக்களே கருணாவின் கதையை முடிக்கத் தயாரானார்கள். ஆனால் லண்டன் போலீஸிடம் கருணா சிக்கியதால் அவர் உயிர் தப்பியது. இப்போது பலப்படுத்தப்பட்ட பாதுகாப்புகளுடன் வலம்வரும் கருணாவை வீழ்த்த தனிப்பட்ட வீரர்களாக மட்டுமே அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்க�
�ாம். அவர்களில் மனித வெடிகுண்டுகளும் அடக்கம். துரோகத்துக்கான பரிசு விரைவிலேயே அவருக்குக் கிடைக்கும்!” என்கிறார்கள்.

இதற்கிடையில், ”புலிகள் அமைப்பைவிட்டு வெளியேறி ஜனநாயகப் பாதையில் நாட்டம் கொண்டு எங்களை அணுகிய கருணாவுக்கு உரிய மரியாதை கொடுத்திருக்கிறோம்.

அவரைப் போல் யார் வந்தாலும் எம்முடைய ஜனநாயகக் கதவுகள் திறந்தே இருக்கும். ஆயுதங்களை வீசிவிட்டு எம்மை நோக்கி வருபவர்களுக்குகைகொடுக்கத் தயாராக இருக்கிறோம்… தற்போது நடந்து கொண்டிருக்கும் இறுதிப் போரின் வெற்றிக்குப் பிறகு, கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துக் கௌரவிப்போம்…” என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே, கருணாவுக்கு நற்சான் றிதழ் கொடுத்திருக்கிறார்.

அன்று பிரபாகரனுக்கு காவல் நின்றதால் ஊர்உலகத் துக்கு அறிமுகமான கருணா, இன்று ராஜபக்ஷேவின் ஏவலாளியாகி சிங்கள அரசின் ஏகபோகங்களுக்கு அதிபதி ஆகி இருக்கிறார்.

Source & Thanks : yarl.com

Leave a Reply

Your email address will not be published.