‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (10.01.09) செய்திகள்

 கண்டியாழ்ப்பாணம் 9 வீதி இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. 300மைல் நீளமான இந்தப் பாதையில் ஒரு சிறிய தூரமே புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பாதையோரத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ். காங்கேசன்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை பொலித்தீன் பைகளால் கட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட 4 சடலங்களை மீட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலங்கள் நான்கையும் பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். ஆயினும் மேற்படி சடலங்கள் குறித்து தகவல்கள் எதனையும் பொலிஸ் தரப்பு தமக்கு வழங்கவில்லையென யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் சடலங்கள் அடையாளம் காண்பதற்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அதே வேளை யாழ்ப்பாணம் கொட்டடி, சீனிவாச வீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இனந்தெரியாத ஆயுததாரியினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சூட்டுச் சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர் கோபால் வீதியைச் சேர்ந்த கே.சிவானந்தன் வயது 37 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதிக்குச் சென்று கொண்டிருக்கையிலேயே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின்போது படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இவர் உயிரிழந்துள்ளார். இவரது கொலை தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசாõங்கம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்தால் அது தொடர்பில் இலங்கையின் சட்ட வரையறைக்குள் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக எந்த விதமான முறைப்பாடுகளும் இல்லை. கிடைத்தால் விசாரிப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

ஆனையிறவை கைப்பற்றியது தொடர்பில் அரச தரப்பு ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: பிரபாகரனை கையளிக்குமாறு இந்தியா உத்தியோகபூர்வமாக கோரவில்லை. ஊடகங்களிலேயே செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் இந்திய நீதிமன்றத்தில் பிரபாகரனுக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டு மரண தண்டனை தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கை மத்திய வங்கி தாக்குதலில் பிரபாகரனுக்கு 200 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரபாகரனை கைது செய்தால் இலங்கைக்குள் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

அத்தோடு இந்தியாவுடன் கைதிகளை பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவில்லை. சர்வதேச சட்டங்களுக்கமைய ஒப்படைக்க முடியும். இது தொடர்பில் இலங்கையின் சட்ட வரையறைக்குள் ஆராயப்பட்டு தீர்மானங்களை எடுப்போம். விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தொடர்பில் எதுவிதமான முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை. நீதிமன்றத்தில் தண்டனை தீர்ப்பும் வழங்கப்பட்டதில்லை. முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரிப்போம். புலிகளுக்கு எதிரான படையினரின் வெற்றியை மட்டும் அல்ல அதன் பின்னர் அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னுரிமை வழங்கியுள்ளார். வடபகுதி மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வெளிநாடுகள் இனிமேல் அரசாங்கத்தின் ஊடாக நேரடியாக வழங்க முடியும். அதற்கான பாதைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொø மற்றும் சிரச தொலைக்காட்சி நிறுவனம் மீதான தாக்குதல்கள் ஆகிய வன்முறைகளின் பின்னணியில் இராணுவ புலனாய்வுத் துறையின் ஒரு குழுவே செயற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க New;W சபையில் குற்றம் சுமத்தினார்.

இராணுவத் தளபதிக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் மாத்திரமே பொறுப்புக் கூறும் இந்த குழுவினரின் செயற்பாடுகளை உடனடியாக கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு காத்தான்குடி காவல்நிலையத்திற்குட்பட்ட நாவற்குடா பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிமையாளர் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 50 அகவையுடைய தம்பிராசா ரவிந்திரன் என அழைக்கப்படுபவர் எனவும் சடலம் காத்தான்குடி காவல்துறையினரால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!
வடகிழக்கிலிருந்து கொழும்பில் தற்காலியமாக மற்றம் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் அந்த அந்த காவல்நிலையத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டியுள்ளனர்.
இன்று சனிக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி கொழும்பில் குடியிருக்கும் பகுதியில் அமைந்தள்ள காவல்நிலையங்களுக்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரமும் இவ்வாறு பதிவுகளை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் போது 68 தமிழர்கள் கைது செய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அனைவரும் உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் இணையத்தளத்தின் மூலமாகவும் இப்பதிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இரண்டுநாள் விஜயமாகத் தைப்பொங்கலன்று கொழும்பு வருகின்றார் எனத் தெரியவருகின்றது. எனினும், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மைக்காலத்தில் கொழும்புக்கு வருவதற்கான ஏற்பாடு ஏதும் இல்லை என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டி இலங்கை அரசுடன் பேசுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை விரைவில் கொழும்புக்குத் தாம் அனுப்புவார் என ஓரிரு தினங்களுக்கு முன்னர் கூட, சென்னையில் வைத்துத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்திருந்தாராயினும், அவ்வாறு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு வருவதற்கான ஆயத்தங்கள் ஏதும் செய்யப்படவில்லை எனத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
என்றாலும், ‘சார்க்’ அமைப்பின் அமர்வு ஒன்றில் பங்கு பற்றுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பெப்ரவரி மாதத்தில் கொழும்புக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு என்றும்
அந்த உத்தேச விஜயத்தை அவர் மேற்கொண்டாலும், அதற்கும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும்
அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.
இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு தைப்பொங்கலன்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு வருகின்றமை கூட வழமையான இருதரப்பு உறவுகள் மற்றும்சார்க்’ கட்டமைப்புத் தொடர்பானதே. அதற்கு மேல் இந்த விஜயத்தில் குறிப்பிடத்தக்க விடயம் ஏதும் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 88.89 ‌விழு‌க்காடு வாக்குகள் பாதிவாயின.

திருமங்கலம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,55,647. இதில் ஆண்கள் 76,726 பேர். பெண்கள் 78,921 பேர். இத்தொகுதி .தி.மு. ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் வீரஇளவரசன் இறந்ததால் நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

தி.மு. சார்பில் லதாஅதியமான், ...தி.மு..வில் முத்துராமலிங்கம், தே.மு.தி. தனபாண்டியன், .. பத்மநாபன் உட்பட 26 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு நேற்று நடந்தது. மொத்தம் 190 வாக்குச்சாவடிகளிலும் காலை 6.30 மணிக்கே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெண் வாக்காளர்கள் அதிகளவில் வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். பதற்றமான வாக்கு சாவடிகளில் கூடுதல் காவல‌ர்க‌ள் குவிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

செக்கானூரணி, கள்ளிக்குடி, குராயூர் உட்பட 15க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடி எண் சரியாக குறிப்பிடப்படாதது, மின்னணு இயந்திர பழுது போன்ற காரணத்தால் வாக்குப்பதிவு தொடங்க 15 நிமிடம் தாமதமானது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, தேர்தல் பார்வையாளர்கள் சுனில்குமார் குஜூர், ஆனந்த்சிங் ஆகியோர் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று பார்வையிட்டனர். அசம்பாவிதம் எதுவும் இன்றி அமைதியாக சில வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நடந்தது.

88.89 ‌விழு‌க்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக திருமங்கலம் தொகுதியின் தேர்தல் அதிகாரியான மதுரை நிலச்சீர்திருத்த உதவி ஆணையர் ராமச்சந்திரன் கூறினார்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பல‌த்த பாதுகாப்புடன் லாரி மூலமாக மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு, துணை ராணுவம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
அத்தியாவசிய பணிகளுக்கு ஒத்துழைப்பு தராத மோட்டார் வாகனங்கள், ஓ‌ட்டுன‌ர்க‌ளி‌ன் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக த‌மிழக அரசு வெளியிட்டு‌ள்ள செய்திக்குறிப்பில், கடந்த 5ஆ‌ம் தேதியில் இருந்து நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம், டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், பேச்சுவார்த்தை மூலம் முடியாமல் தொடர்ந்து நீடிப்பது வருத்தத்தை தருவதாக உள்ளது.

இந்த பிரச்சனையில் சுமுக முடிவு ஏற்படவேண்டும்; போராட்டம் என்பது கோரிக்கைகளை வலியுறுத்தி அதில் வெற்றி பெறுவதற்காகத்தானே தவிர, யார், யாரை வீழ்த்தினார்கள் என்று பார்த்து வெற்றிக் கொடி நாட்டுவதற்காக இல்லை என்பதை சிந்தித்து பிரச்சனைகளும், விளைவுகளும் மக்களை எப்படி தொடுகின்றன என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதே தமிழக அரசின் கருத்து எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அ‌கில இ‌ந்‌திய மோ‌ட்டா‌ர் வாகன‌ ச‌ங்க‌‌ச் செயல‌ர் ரமே‌ஷ் குலா‌மி அ‌த்‌தியாவ‌சிய‌ப் பொரு‌ட்க‌ள் பராம‌ரி‌ப்பு‌ச் சட்ட‌த்‌தி‌‌ன்கீ‌ழ் (எ‌ஸ்மா) கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
!!!!!!!!!!!!!!!

 இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் காசா பகுதியில் தமது இலக்குகள் மீதான தாக்குதல்களை வெள்ளியன்றும் தொடர்ந்தன.
உடனடியான மற்றும் நீடிக்கத்தக்க போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று .நா. மன்ற பாதுகாப்பு சபையின் தீர்மானம் வியாழன் இரவு வந்திருந்த நிலையிலும் தாக்குதல்கள் தொடர்ந்தன.
இஸ்லாமியவாத இயக்கமான ஹமாஸ் காசா பகுதியிலிருந்து தெற்கு இஸ்ரேலுக்குள் ராக்கெட் தாக்குதல்களை தொடர்ந்தது.
ராணுவதாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஓல்மர்ட் அவர்கள் கூறியுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான .நா. மன்ற தீர்மானத்தைசெயற்படுத்தமுடியாத ஒன்றுஎன்று கூறிய அவர், “கொலைகார பாலஸ்தீன இயக்கங்கள்அந்த ஒப்பந்தத்தை மதித்து நடக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
.நா. மன்ற தீர்மானத்தை ஹமாஸ் இயக்கமும் புறந்தள்ளியது.
!!!!!!!!!!!!!!!!!!!!
காசாவில் இஸ்ரேலிய சிப்பாய்கள் சப்பந்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஒரு சம்பவம் போர்க்குற்றத்தின் அனைத்து கூறுகளையும் தாங்கிநிற்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தலைமை ஆணையர் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.
காசா நகரின் ஜெய்தூண் பகுதிக்கு கடந்த நான்கு தினங்களாக அம்புலன்ஸ் வண்டிகளை செல்ல இஸ்ரேலிய இராணுவ அனுமதிக்கவில்லை என்று வியாழனன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்கை குறித்து அவர் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளார்.
அதன் பின்னர் செஞ்சிலுவைச் சங்கம் உயிர்தப்பிய பலரை அங்கு கண்டுள்ளது. அவர்களில் உயிரிழந்த தாயின் உடலருகே கண்டெடுக்கப்பட்ட நான்கு குழந்தைகளும் அடங்குவார்கள்.
காயமடைந்தவர்களை காப்பாற்றி அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்க வேண்டிய பொறுப்பு இஸ்ரேலுக்கு இருக்கிறது என்று நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலையும் அவர் கண்டித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.