தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை அரசியல் உள்நோக்கமே: ஐ.தே.க.

தமிழீழ விடுதலைப் புலிகளை அரசாங்கம் தடை செய்தமை அரசியல் உள்நோக்கத்தை அடிப்படையாக கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஓன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

சமாதானத்தில் ஈடுபாடில்லாத நிலையில் உள்ள பயங்கரவாத அமைப்பொன்றை தடைசெய்வது சரியான விடயமாக இருந்த பொழுதிலும் அதனை எப்பொழுதோ செய்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரசாங்கம் உடனடியாக தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்திருப்பதானது முழுமையான அரசியல் நோக்கம் கருதியே மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

எதிர்வரும் மாகாணசபை தேர்தல்களில் வெற்றி பெறும் நோக்கில் மக்கள் மத்தியில் யுத்தத்தை நியாயப்படுத்தும் நோக்கிலேயே இந்த தடையை இந்த தருணத்தில் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.