இராமசாமி, இந்திய பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுகின்றமை தொடர்பில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், எதுவித நடவடிக்கையும் எடுக்காமையானது கண்டனத்திற்கு உரியது என மலேசிய தமிழ் அரசியல்வாதியான இராமசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டிக்காத மன்மோகன் சிங், காஸாவில் பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவது குறித்து கவலைப்படுவதாக இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் நிகழ்வில் பங்கேற்ற அவர், மலேசிய தமிழர்கள், இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் நிலையில் இந்திய பிரதமர் ஒரு அறிக்கையை கூட வெளியிடாமை வருத்தத்திற்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.