ஸ்டீல் விலை குறைய வாய்ப்பு

புதுடில்லி: வரும் ஜூன் மாதத்திற்கு பின், இந்தியாவில் ஸ்டீல் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உருக்குத் துறை செயலர் பி.கே.ரஸ்தோகி கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் உருக்கு தொழில் துறை, 4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அரசு மேற் கொண்ட பல்வேறு நிதி நடவடிக்கைகளின் காரணமாக, இத்தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற் றம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்திற்கு பின் நிலக்கரியின் விலை குறையும். இதன் தாக்கம், உள்நாட்டு ஸ்டீல் சந்தையிலும் எதிரொலிக்கும். இதன் விளைவாக இந்தியாவில் ஸ்டீல் விலை ஒரு டன்னுக்கு 3,000 ரூபாய் வரை குறையும். இவ்வாறு ரஸ்தோகி கூறினார். ‘இந்தியாவின் முக்கிய ஸ்டீல் தொழில் நிறுவனங்கள், நிலக்கரியை பெறுவதற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுரங்க நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தம் செய்துள்ளன. நிலக்கரியின் விலை குறையும் என்ற செய்தி, இந்நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்’ என, ஸ்டீல் தொழில் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source  &  Thanks  :  dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.