ஒபாமா பதவியேற்பு விழாவில் தாக்குதல்: பயங்கரவாதிகள் திட்டம்

வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவின் பதவியேற்பு விழாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டில் இறுதியில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். அவர், வரும் 20ஆம் தேதி நாட்டின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.

இவ்விழாவில் அமெரிக்கத் தலைவர்கள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கியத் தலைவர்கள் ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.

இவ்விழாவில், தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

இதனால், பதவியேற்பு விழா நடைபெறும் கேபிடல் ஹில் பகுதியைச் சுற்றியுள்ள நட்ச‌த்திர விடுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், உணவகங்கள் மற்றும் சாலைகள் ஆகியவற்றில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.