இஸ்ரேல் நாட்டு தூதுவரை வெனிசுலா அரசு வெளியேற்றியது

காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் வான் மற்றும்தரைவழி தாக்குதல்களினால் 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்த முடிவை வெனிசுலா நாட்டு அரச எடுத்துள்ளது.

2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் இன்றுவரை காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கடுமையான தாக்குதலை வெனிசுலா நாட்டு ஜனாதிபதி ஹியூகோ சாவெஸ் வன்மையாக கண்டித்திருந்தார்.

உலகநாடுகள் பல காஸா மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் அனைத்தும் உடன் நிறுத்தப்பட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த போதும் அதனை பொருட்படுத்தாது இஸ்ரேல் தொடர்ந்து மக்கள் குடியிருப்பு மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலையடுத்து அந்நாட்டு தூதுவரை வெளியேற்ற வெனிசுலா தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.