வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மற்றும் தருமபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வட்டக்கச்சி பகுதியில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது இன்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா படையினர் தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 11 மாத கைக்குழந்தை உட்பட 3 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வட்டக்கச்சி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று காலை சிறிலங்கா படையினர் தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

கல்மடு நகர் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

11 மாத குழந்தையான சுதாகரன் சுடர்நிலவன்

கே.பிரதீபா (வயது 20)

கமலா (வயது 56)

அகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மா.ஜெகராச் (வயது 16)

அகவை (வயது 06)

அன்ரனி (வயது 16)

சசி (வயது 25)

அன்ரனி லக்சுமி (வயது 23)

கலிஸ்ரன் (வயது 15)

ரேவதி (வயது 36)

பச்சையம்மா (வயது 66)

விஜயன் உசா (வயது 30)

ரமேஸ் (வயது 22)

சுகந்தினி (வயது 38)

ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் காயமடைந்த ஒருவரின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

தர்மபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

வட்டக்கச்சி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 3 அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் தருமபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலால் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த வேளையில் பதற்றத்தில் நீரில் விழுந்த ஒரு வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

வட்டக்கச்சி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த குடும்பம் ஒன்று தருமபுரம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சிறிலங்கா படையினரின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

இதனால் பதற்றமடைந்த அந்த ஒரு வயது குழந்தை நீரில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.