அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிலிருந்து வெளியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்

சிறிலங்காவின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிலிருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக அக்கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகவியலாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை அவர் கூறியதாவது:

அனைத்துக் கட்சிக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இம் மாதத்தில் முடிவெடுக்க உள்ளது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் வழித் தீர்வு என்பது அவசியமனதாகும். ஆனால், அரசு அதில் அக்கறை செலுத்துவதாக இல்லை.

கிழக்கில் கிளிநொச்சி வீழ்ந்த கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறு முஸ்லிம் வர்த்தகர்களை அரச தரப்பு வற்புறுத்தியிருக்கிறது. இத்தகைய செயற்பாடுகளின் மூலம் நல்லிணக்கம் என்பது பாரிய ஆபத்துக்குரியதாகிவிடும்.

எந்த ஒரு நபருக்கும் தேசப்பற்றை திணிக்கக் கூடாது.

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் நடைபெற உள்ள போராட்டத்தில் முஸ்லிம் காங்கிரசும் பங்கேற்கும் என்றார் அவர்.

Source & Thanks : yarl.com

Leave a Reply

Your email address will not be published.