காஸாவில் கடும் மோதல்

மத்திய கிழக்கின் காஸாவிலே இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேலிய படையினர் பாலஸ்தீன தீவிரவாதிகளுடன் கடுமையாக சண்டையிட்டுவருகிறர்கள்.

வடக்கு காஸாவிலே துருப்பினர் முன்னேறிவர தரைப்படையும் விமானப்படையும் மட்டுமல்லாது கப்பல் படையும் குண்டுகளை வீசிவருகிறது.

எல்லையிலிருந்து பார்க்கும் போது காஸாவுக்குள் ஆழமாக மோதல்கள் நடந்து வருவதாக தெரிகிறது என்று காஸா எல்லையிலுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

காஸா நகரின் இரண்டு பக்கங்களிலும் இஸ்ரேலிய டாங்கிகள் நிலைகொண்டுள்ளன.

இஸ்ரேலியத் தரைப்படைத் தாக்குதல்கள் சனிக்கிழமை மாலை ஆரம்பமானதிலிருந்து முப்பது பேர் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

தரைவழித் தாக்குதல் ஆரம்பமானதையடுத்து இஸ்ரேல் மீது நடத்தப்படுகின்ற ராக்கெட் தாக்குதல்களின் எண்ணிக்கை ஏற்கனவே கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

Source & Thanks : bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.