மருத்துவமனையில் கலாம் அனுமதி

புதுடெல்லி : முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்துல் கலாமின் தோலில் ஏற்பட்ட தொற்று காரணமாக அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக நேற்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்துல் கலாமின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவ வல்லுனர்கள் குழு ஒன்று அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவை கூறின.

எனினும், கலாம் எப்போது வீடு திரும்புவார் என்ற விவரத்தைத் தெரிவிக்க டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.