‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (04.01.09) செய்திகள்

 கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமையை அடுத்து தென்னிலங்கையில் இடம்பெறும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் எதிரொலியாக பொதுமக்களின் பாதுகாப்பதற்காக இந்த மாதத்தில் நடைபெறவுள்ள கண்டி தலதாமாளிகை மற்றும் களனி பெரஹராக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சி கைப்பற்றப்பட்டமையை அடுத்து தென்னிலங்கையில் தற்கொலைத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்ற நிலையில் பொதுமக்களின் பாதிப்பை தவிர்க்கும் பொருட்டு பலர் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இது சமய நிகழ்வுகளுக்கும் பொருந்தும் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான இடங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்குகளாக மாறலாம் என அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவையும் கைப்பற்றியதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கையில் தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நோர்வே அரசாங்கத்தின் மத்தியஸ்தத்தின் கீழ் 2002ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையின்போது புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டது.

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவிலியன்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கு புலிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்த சட்டங்களை மறுசீரமைத்து புலிகளின் செயற்பாடுகளை முற்றாக இலங்கையில் தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு தடை செய்யப்பட்டதன் பின்னர் இந்நாட்டு அரசியல்வாதிகளுக்கோ அல்லது வேறும் அமைப்புக்களுக்கோ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேண முடியாதெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து நாடுகள் இதுவரையில் புலிகளை முற்றாக தடை செய்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் பகுதியளவில் புலிகளை தடை செய்துள்ளன.

1979ம் ஆண்டு விசேட சட்டமூலமொன்றின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசு மோட்டை, கண்டாவளை, புளியம்பொக்கணை, வட்டகச்சி, தர்மபுரம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் இடம்பெயர ஆரம்பித்திருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டம் இடம்பெயர்ந்தவர்களால் நிரம்பியிருக்கும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து வருவதினால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வவுனியாவில் இருந்து வெள்ளிக்கிழமை முல்லைத்தீவை நோக்கி வந்த லொறிகள் கடும் ஷெல் வீச்சு காரணமாக ஓமந்தை சோதனை சாவடிக்கு திரும்பிச் சென்று விட்டதாகவும் இரண்டு லொறிகளில் மரக்கறி வகைகள் இருந்ததாகவும் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்தார். அவர் முல்லைத்தீவு நிலைமை குறித்து மேலும்

கடந்த வெள்ளிக்கிழமை விமானக் குண்டு வீச்சினால் முல்லைத்தீவு நகரில் தனியார் பஸ் டிப்போ சேதமடைந்தது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். குண்டு வீச்சு இடம்பெற்ற இடத்திற்கு முன்னால் கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிலையம் இருந்தது. அதன் மீது குண்டு விழுந்திருந்தால் பாரிய அனர்த்தம் நிகழ்ந்திருக்கும்.

தற்÷பாது முல்லைத்தீவு நகரத்திற்கு ஷெல் வீச்சு சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளன. கிளிநொச்சியில் உள்ள மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்து வருவதால் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தற்போது இம் மாவட்டத்தில் உள்ள அகதிகளை பராமரிப்பதில் சிக்கல் நிலைமை உள்ள நிலையில் அம்மாவட்ட மக்களின் வருகையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்vd.முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற விமானத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் வீச்சு காரணமாக பதினொரு பேர் உயிரிழந்துள்ளதுடன் அறுபத்தியிரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார அத்தியட்சர் டாக்டர் எஸ். சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, குருதி பரிசோதனை பேக், குருதி பரிசோதனை திரவம், சேலைன் ஆகியவற்றிற்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

இதுகுறித்து பணிப்பாளர் டாக்டர் சத்திய மூர்த்தி மேலும் தெரிவித்ததாவது: தர்மபுரம் வைத்தியசாலையில் இரத்தத்திற்குபெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இரத்த தானம் செய்யுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மாவட்ட மக்கள் சில மறைமுக நோய்களால் உயிரிழந்து வருகிறார்கள். இந்த மரணத்திற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பரந்தனில் இருந்து 9 வீதி வழியாக புறப்பட்ட படையினர் தற்போது ஆனையிறவு தெற்கு புறத்தில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாகவும் கிளிநொச்சி கிழக்கு புறத்தில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நிகழ்ந்து வருவதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.

முன்னேறி செல்லும் படையினருக்கு உதவும் வகையில் விமானப் படையினர் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் உள்ள புலிகளின் நிலைகள் மீது நான்கு முறை விமான தாக்குதல்களை நடத்தியதாக விமானப் படையின் ஊடக பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

கிளிநொச்சியின் கிழக்கு புறத்தில் கடுமையான மோதல்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்த பிரிகேடியர் உதய நாணயக்கார ஆனையிறவை நோக்கிச் செல்லும் படையினருக்கு பாரிய எதிர்ப்புகள் இருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில் முல்லைத்தீவை நோக்கி முன்னேறிச் செல்லும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் தண்ணீரூற்று பகுதியில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளியவளையை கைப்பற்றும் நோக்கில் முன்னேற முயலும் படையினர் மீது புலிகள் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிய வருகிறது.

எறிகணை, பீரங்கி குண்டுத் தாக்குதல்களால் முல்லைத்தீவு மற்றும் அதனை அண்டிய கிராமங்கள் அதிர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதால் கடந்த வியாழக்கிழமை முதல் முல்லைத்தீவுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக துண்டிக்கப்பட்டிருப்பதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வடக்கு கிழக்கில் இருந்து 2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வந்து கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் அனைவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸில் பதிவு செய்ய வேண்டும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருப்பவர்கள் அனைவரும் இன்றைய கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் பதிவு செய்தவர்களும் இன்று மீண்டும் பதிவு செய்ய வேண்டும். காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மேல் மாகாண பொலிஸ் பிரிவுகளில் இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேல் மாகாணத்தில் தங்கியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் இன்று பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

2003ஆம் ஆண்டுக்கு பின்னர் மேல் மாகாணத்திற்கு வந்து தங்கியிருக்கும் வடக்கு கிழக்கு மாகாண மக்களே இந்த பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரு மான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணி வரை மேற் கொள்ளப்படும் என அவர் கூறினார். மேல் மாகாணத்தில் தங்கியுள்ள வடக்கு கிழக்கு மாகாண மக்கள் தாம் முன்னர் பதிவு செய்த இடங்களுக்கு சென்றே தமது பதிவு களை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள், நிரந்தர மாக தங்கியிருப்பவர்கள் என அனைவரும் இந்த பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர கூறினார்.

பதிவுகளை மேற்கொள்ள செல்பவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற் கான ஆவணங்களை கொண்டு செல்வதன் மூலம் நேர விரயத்தை தவிர்க்க முடியும் எனவும் அவர் ஆலோசø வழங்கியுள்ளார்.

!!!!!!!!!!!!!!!!!!!
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான தருணம் வந்துள்ளது vd டைம்ஸ் ஓவ் இந்தியா ஆசிரிய தலையங்கத்தில் தெரிவpj;Js;sJ
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநக ரான கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தமை இலங்கை இரா ணுவத்தின் பெரும் வெற்றியொன்றாக அமையும். புலி கள் இந்நகரத்திலேயே தம்மால் கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாகப் பகுதிகளைக் கொண்டிருந்தனர். ஒரு தசாப் தகாலத்திற்கும் அதிகமாக இந்நகரம் கொழும்பு அரசாங் கத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. கிளி நொச்சி கைப்பற்றப்பட்டமையால் அப்பிராந்தியத்தில் புலிகளுக்கு தளமொன்று இல்லாதிருப்பதுடன் போரின் போக்கிலும் மாற்றம் ஏற்படலாம். புலிகள் போரில் நிலைத்திருப்பதற்காக பெரும்பாலும் கெரில்லா போர் உத்திகளுக்குத் திரும்பக்கூடும். ஆனால் இப்பிரச்சினை யைத் தீர்ப்பதற்காக கொழும்பு அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான தருணம் தற்போது கனிந்துள்ளது என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஓவ் இண்டியாவின் நேற்றைய ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆசிரிய தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சிறுபான்மை தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபி லாஷைகளை தீர்த்துவைப்பதற்கான அரசியல் தீர்வுப் பொதியொன்றை அமுல்படுத்துவதற்கு கொழும்பு, தமி ழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான தோல் வியை எதிர்பார்த்திருந்தது. அதில் ராஜபக்ஷ அரசாங் கம் இனியும் தாமதிக்கக்கூடாது. புலிகள் இயக்கம் 1970களில் தமிழ் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்துவதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இராணுவ அமைப்பொன்றாக அது மாற்ற மடைந்தது. மாற்றுக் கருத்துடையோரையும் விலகிச் சென்றவர்களையும் அடக்குவதற்காக புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் உலகெங்குமுள்ள பயங்கரவாத அமைப்புகளினால் பின்பற்றப்படும் வழிமுறைகளாகும்.

எவ்வாறெனினும் புலிகளின் அரசியல் இயல்பையும் தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் வேறுபடுத்துவது அவசியமானதாகும். அவர்களின் நியாயமான அபிலாஷைகள் பலாத்காரத்தினால் அடக்கப்பட்டுள்ளன. இப்போது புலிகள் பலவீனமடைந்த ஒரு சக்தியாக உள்ள நிலையில் கொழும்பு அரசியலமைப்பு சீர்திருத்தத்தங்களை ஆரம்பிப்பதுடன் அவற்றை அமுல்படுத்தவும் வேண்டும். இராணுவ வெற்றிகள் நிரந்தர சமாதானமாக மாற்றப்படுவதற்கு அரசியல் தீர்வொன்று அவசியமானதாகும். பல மாதங்களாக இலங்கை ஆயுதப்படைகளின் உக்கிரமான வான் தாக்குதலுக்கு முகம்கொடுத்த பொதுமக்களை வெற்றி கொள்வதென்பது இலகுவானதாக இருக்கப்போவதில்லை. அதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. மூன்று தசாப்த கால யுத்த்தினால் சீரழிந்த பிராந்தியத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச சமூகம் உதவக்கூடும். ஆனால் தமிழ் மக்களை வென்றெடுப்பதற்கு கொழும்பு தலைமை வகிக்க வேண்டியிருக்கும்.

பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளியை நீக்குவதற்கு இலங்கை சிவில் சமூகமும் பங்காற்ற வேண்டியுள்ளது. புலிகளின் தோல்வி தமிழ் நாட்டிலும் தாக்கமொன்றை ஏற்படுத்தும். ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இலங்கை யுத்தத்தில் தலையிடாதிருப்பதில் இதுவரை கவனமாக இருந்துவந்தது. அதுவே சரியான கொள்கை. இந்த அரசாங்கம் இப்போது அரசியல் தீர்வொன்றுக்கான அவரச தேவை குறித்து கொழும்பை வலியுறுத்தும் அதேவேளை தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் மீதான அவர்களின் கரிசøனகளையும் புலிகளின் அரசியல் இலக்குகளையும் வேறுபிரிப்பதிலும் செயலாற்றலாம்என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஓவ் இண்டியாவின் நேற்றைய ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியில் விடுதலை புலிகள் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவு 10.30 முனைக்காடு பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் விசேட அதிரடிப்படை சிப்பாயைச் சேர்ந்த 37அகவையுடைய எஸ். விஜயசிறி கொல்லப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலையடுத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அருளம்பலம் என்ற பொதுமகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!
எதிர்வரும் காலங்களில் வாகனப் பதிவின்போது வாகனத்தின் புகைப்படமும் பதிவு ஆவணங்களுடன் இணைக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாகனத்தின் புகைப்படம் இணைக்கப்படாத ஆவணங்கள் நிராகரிக்கப்படும் என வாகனப் பதிவாளர் நாயகம் பி.விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

வாகனத்தின் முழுப்படமும், முகப்பு, இரு பக்கங்கள் மற்றும் பின்புறம் போன்றவை இணைக்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது.
!!!!!!!!!!!
பொலிஸ் சேவையில் இணைவது தொடர்பில் இதுவரையில் நடைமுறையில் உள்ள அடிப்படைத் தகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய படைப்பிரிவுகளில் மிகவும் குறைந்தளவு தகுதிகள் கோரப்படுவதனால் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான அடிப்படை தகுதியாக கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ், சிங்களம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உட்பட ஆறு பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது இந்த கல்வித் தகமை இரண்டு தடவைகளிலேனும் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் போதுமானதென அறிவிக்கப்பட்டுள்ளது.

 
india
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சிப் பிரமுகரான வைத்திலிங்கம் கூறியுள்ளார். தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்என்று தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் குரல்கொடுத்து வரும் நிலையில், அதற்கும் ஒருபடி மேலே போய், “முதலில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்என்ற குரல், பா... செயற்குழு கூட்டத்தில் ஓங்கி ஒலித்திருக்கிறத.இந்தக் கோரிக்கையை வழிமொழிந்து தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அந்தக் கோரிக்கைக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது முக்கியமானது. அது மட்டுமல்ல, “சிறையில் இருக்கும் ராஜீவ் கொலையாளி நளினியை, பிரியங்காவே நேரில் சந்தித்துவிட்டு வந்தபிறகு புலிகளை எதிர்க்க காங்கிரஸ்காரர்களுக்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாதுஎன்று, தமிழக பா... தலைவர் இல.கணேசனும் அந்தக் கூட்டத்தில் குரல் கொடுத்துள்ளார். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதை முன்மொழிந்தவர் பா... தேசிய பொதுக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம் mtuJ குமுதம் ரிப்போர்ட்டர்f;fhd nrt;tp jkpofj;jpy; gugug;ig Vw;gLj;jpAs;sJ
!!!!!!!!!!!!!!!!!!!!!!

 இ‌ந்‌தியா‌நா‌ட்டி‌ற்கு உ‌ள்ளேயு‌ம் வெ‌‌ளியேயு‌‌ம் உ‌ள்ள பய‌ங்கரவா‌த முகா‌ம்களை‌த் தா‌க்‌கி அ‌ழி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றுவி‌ஞ்ஞா‌னியு‌ம் மு‌ன்னா‌ள் குடியரசு‌த் தலைவருமான அ‌ப்து‌ல் கலா‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இமா‌ச்சல‌ப்பிரதேச‌ மா‌நில‌‌த்‌தி‌ல் உ‌ள்ள ஹ‌மி‌ர்பூ‌ரி‌ல் மாணவ‌ர்க‌ளுடனான கல‌ந்துரையாட‌ல்நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்ற அ‌ப்து‌ல் கலா‌ம், பய‌ங்கரவாத‌த்தை அடியோடு அ‌ழி‌ப்பத‌ற்கு மூ‌ன்று ஆலோசனைகளை வழ‌ங்‌கினா‌ர்.

“முத‌லி‌ல் இ‌ந்‌தியநா‌ட்டி‌ன் ஒ‌வ்வொரு குடிமக‌னி‌ன் ப‌ங்கே‌ற்புட‌ன்மிக‌ப்பெ‌ரியபிர‌ச்சார‌த்தை பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு எ‌திராக நட‌த்த வே‌ண்டு‌ம்.

இர‌ண்டாவதாக, இ‌ந்‌தியநா‌ட்டி‌ற்கு உ‌ள்ளேயு‌ம் வெ‌ளியேயு‌ம் உ‌ள்ள பய‌ங்கரவாத முகா‌ம்களை‌த் தா‌க்‌கி அ‌ழி‌க்க வே‌ண்டு‌ம்.

மூ‌ன்றாவதாக, பய‌ங்கரவாத‌ம் தொட‌ர்பான எ‌ல்லா வழ‌க்குகளையு‌ம் உடனடியாகவிசா‌ரி‌த்து, கு‌ற்றவா‌‌ளிக‌ள் அனைவரையு‌ம் த‌ண்டி‌க்க வே‌ண்டு‌ம்எ‌ன்றா‌ர் கலா‌ம்
!!!!!!!!!!!!
மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல்க‌ளி‌ல் பா‌‌கி‌ஸ்தானை‌ச் சே‌ர்‌‌ந்த பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌த் தொட‌ர்பு‌ள்ளது எ‌ன்பத‌ற்கான ஆதார‌ங்களுட‌ன் உ‌ள்துறை அமை‌ச்ச‌ர்சித‌ம்பர‌ம் அடு‌த்த வார‌ம் அமெ‌ரி‌க்கா செ‌‌ல்‌கிறா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ன்மீது ச‌ர்வதேச அழு‌த்த‌த்தை அ‌திக‌ரி‌க்கு‌ம் நடவடி‌க்கைக‌ளி‌ல் ஒரு பகு‌தியான இ‌ந்த‌ப் பயண‌த்‌தி‌ற்கான தே‌தி இ‌ன்னு‌ம் முடிவு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று அமை‌ச்ச‌ர்சித‌ம்பர‌ம் தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ம்பைத் தா‌க்குத‌ல்க‌ள் தொட‌ர்பான ஆதார‌ங்களை ஒரு‌ங்‌கிணை‌க்கு‌ம் ப‌ணி‌யி‌ல் அயலுறவு அமை‌ச்சக‌ம் ஈடுப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், அ‌ந்த ஆதார‌ங்களு‌டன் அமெ‌ரி‌க்க அ‌திகா‌ரிகளுட‌ன் தா‌ன்விவா‌தி‌க்க உ‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அமெ‌ரி‌க்க உ‌ள்நா‌ட்டு‌ப் பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் மை‌க்கே‌ல் செ‌ர்‌ட்டாஃ‌ப், அயலுறவு அமை‌ச்ச‌ர் கா‌ண்ட‌லீசா ரை‌ஸ் ஆ‌கியோருடனு‌ம், அமெ‌ரி‌க்கா‌வி‌ன் எ‌தி‌ர்கால அ‌திப‌ர் பார‌க் ஒபாமா‌வி‌ன் குழு‌வினருடனு‌ம்சித‌ம்பர‌ம் பே‌ச்சு நட‌த்துவா‌ர் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.
!!!!!!!
இத‌‌ற்‌கிடை‌யி‌ல், இ‌ந்‌தியா‌வி‌ற்கான அமெ‌ரி‌க்க‌த் தூத‌ர் டே‌வி‌ட்சி மு‌ல்போ‌ர்டு டெ‌ல்‌லி‌யி‌ல் New;W அமை‌ச்ச‌ர்சித‌ம்பர‌த்தை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சினா‌ர். சுமா‌ர் 40 ‌நி‌மிட‌‌ங்க‌ள்நீடி‌த்த இ‌ந்த‌ச் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போது, மும்பை தாக்குதல் பின்னணி குறித்து இந்தியா திரட்டிய ஆதாரங்கள் பற்றி அவர்கள் விவாதித்ததாக கருதப்படுகிறது.

பிடிபட்ட ஒரே பய‌ங்கரவாதியான அஜ்மல் கொடுத்த வாக்குமூலம், அவன் உள்பட 10 பய‌ங்கரவாதிகள் கராச்சியில் இருந்து மும்பைக்கு கடல்வழியாக வந்த கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட `லாக் புக்உள்ளிட்ட ஆவணங்கள், பய‌ங்கரவாதிகள் பயன்படுத்திய செயற்கை‌க்கோள் தொலைபே‌சிக‌ள், அவர்களுக்கும் பாகிஸ்தானில் இருந்து அவ‌ர்களை வ‌ழிநட‌த்‌தியவ‌ர்களுக்கும் இடையே நட‌ந்த உரையாடல்கள் ஆ‌கியவை அந்த ஆதார தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இந்த ஆதாரங்களை அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளுடன் இந்தியா பகிர்ந்துகொள்ளும்.
!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.