அவர்களால் பிரபாகரனை கைதுசெய்ய முடியாது- பிரபாகரனின் சகோதரி


எனது சகோதரரை வெகு சீக்கிரம் கொல்லப்போவதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் பாதுகாப்பாகவேயுள்ளார். அவரை இலங்கை இராணிவத்தினரால் கைது செய்ய முடியாது ” என விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதரி திருமதி விநோதினி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கனடாவில் ரொரண்டோ நகரின் கிழக்கு பகுதியில் தொடர்மாடியொன்றில் வசித்துவரும் திருமதி விநோதினி ராஜேந்திரன் நஷனல் போஸ்டிற்கு தனது வாழ்க்கை குறிப்பை தெஇவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். “இவ்வாறு ஒரு மனிதன் உருவாவது கடவுளின் விருப்பம். எமது தந்தை இரக்க குணமுள்ளவர், மென்மையாக கதைப்பவர். எனது சகோதரன் அதிகம் வாசிப்பார் வீடு நிறைய புத்தகங்கள் காணப்படும். சிறுகுழந்தையாக இருக்கும் போது அவருடன் நான் விளையாடினேன் சண்டை பிடித்தேன். அவர் சாதாரண சிறுவன் போல் தான் அப்போது காணப்பட்டார்” என குடுபத்தில் மூன்றாவதாக பிறந்த விநோதினி தெரிவித்தார்.

விநோதினி தனது கணவருடன் கனடாவிற்கு புலம் பெயர்ந்த பின் கிளிநொச்சியிலுள்ள பெற்றோருடன் தொடர்புகள் இருந்தன. எனினும் தனது இளைய சகோதரரான பிரபாகரனுடன் தொடர்புகள் இருக்கவில்லை . அவர் தொடர்பான செய்திகள் அறிவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரிலிருந்து பிரபாகரன் விலக மாட்டார் என தான் நம்புவதாகவும், “அவர் எதனையும் ஆரம்பித்தால் முடிக்காது விடமாட்டார்.எமது அப்பாவும் அப்படித்தான் ” என வேலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதரி திருமதி .விநோதினி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.