துலூஸ் நகரில் தமிழர்கள் போராட்டம்(பட இணைப்பு)

பிரான்ஸ் தென் மாநிலமான துலூஸ் நகரின் இதயமான நகரசபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் மக்கள் கடும்குளிரையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டு சிங்கள சிறீலங்கா அரசின் மனித உரிமைமீறல்களைக் கண்டிக்கின்ற பதாதைககளத் தாங்கி நின்றனர்.


சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை விளக்கும் துண்டுப்பிரசுரங்களும் வினயோகிக்கப்பட்டது. பொதுமக்கள், பத்திரிகையாளர், அரசியல் கட்சியைச்சேர்ந்தோரும் குறிப்ப்பிடும்படியாக சோசலிசக் கட்சியைச்சேர்ந்த திரு. பியர். தின்சித் அவர்கள் கலண்துகொண்டார்.

துலூஸ் நகர மேயர் வேலைச்சுமை காரணமாகக்கலந்து கொள்ளமுடியவில்லை. எனினும் அவர் தனது சார்பில் மனித உரிமை விவகாரங்களுக்துப் பொறுப்பான திருமதி கொண்சலஸ் திரிசு அவர்களை அனுப்பி வைத்தார். அவர்களிடம் ஈழத்தில் உடனடி யுத்த நிறுத்தம் ஏற்படுத்தபபடவேண்டும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. இதனைத் தெடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டம் மாலை 4.30 அளவில் நிறைவுபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.