தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளில் “தேசத்தின் குரல்” பாலசிங்கத்தின் பங்கு முதன்மையானது: வெ.இளங்குமரன்

posted in: தமிழீழம் | 0

தமிழீழ வைப்பகத்தின் தொடக்கத்தில் அதன் செயற்பாடுகளில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பங்கு முதன்மையானதாக இருந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி நான்கு அதிரடிப்படையினர் பலி

posted in: தமிழீழம் | 0

அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் அணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு போவது சந்தேகம்

posted in: தமிழ்நாடு | 0

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடுத்த வாரம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு செல்லவுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ள போதும் அது தொடர்பாக உறுதியான தீர்மானம் இதுவரை இல்லை என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.

இராணுவத்தின் குண்டுமழையால் இலங்கையில் உயிர்வாழ முடியாது: தமிழகம் சென்ற அகதிகள்

இலங்கை இராணுவம் தமிழர் பகுதிகளில் குண்டுமழை பொழிவதால் அங்கு உயிர்வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகம் சென்ற அகதிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த ஏழு அகதிகள் கடந்த புதன்கிழமை பேசாலைக் கடற்கரையிலிருந்து படகில் புறப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிகாலை பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கினர்.

ஈழப் பிரச்சனை தொடர்பாக சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

posted in: தமிழ்நாடு | 0

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இன்று சனிக்கிழமை சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்.

வருக! வருக! – ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி

ஐரோப்பாவிலிருந்து 24 மணி நேரமும் ஒலிக்கும் முதல் தமிழ் வானொலியாக ஆரம்பிக்கப்பட்டது ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி என்பது எல்லோரும் அறிந்ததே…